TN Headlines Today: செந்தில் பாலாஜி வழக்கு முதல் வானிலை அப்டேட் வரை...தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- தொடங்கியது விசாரணை - அடுக்கடுக்கான வாதங்களை முன்வைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு!
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர் இளங்கோ ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாதிட்டு வருகிறார். இரு தரப்பினருக்கும் கார சார விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க
- வள்ளலார் குறித்த ஆளுநர் கருத்து.. அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..
வள்ளலார் சனாதன தர்மத்தின் ஒளிரும் சூரியன் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- ஒரு பக்கம் ஸ்பீட் கண்ட்ரோல்.. மறு பக்கம் டாஸ்மாக் கடைகள் மூடல்.. வருவாயை ஈடுகட்ட வழி தேடுகிறதா அரசு?
தமிழ்நாட்டில் இப்போது பரபரப்பாக பேசப்படும் இரண்டு விஷயங்கள், இன்று முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது, அதே சமயம் வாகன ஓட்டிகளுக்கு வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டுமே மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
- மீண்டும் அத்துமீறும் இலங்கை.. இரண்டு நாட்களில் 30 மீனவர்கள கைது.. அவர்களின் நிலை என்ன?
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ள கடற்பரப்பில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம்சாட்டி கைது செய்து வருகிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் சுடப்படுவதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர் கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை மாவட்டமான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மீனவர்களே இந்த தாக்குதலுக்கு அதிக அளவு ஆளாகி வருகின்றன. இதற்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு காண வேண்டுமென தமிழக மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இருந்த போதிலும் தற்போது வரை இதற்கு ஒரு உரிய தீர்வு இல்லாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது நடந்தேறி வருகிறது. மேலும் படிக்க
- TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கும்.. அப்போ வெயில் எப்படி இருக்கும்? இன்றைய வானிலை நிலவரம்..
தென் இந்திய பகுதிகளின் மேல், மேலடுக்குகளில் கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 22.06.2023 மற்றும் 23.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.