TN Headlines Today: கொந்தளித்த துர்கா ஸ்டாலின் சகோதரர்.. பீகார் முதல்வர் நிதீஷ்குமார் வருகை ரத்து.. மாநிலச் செய்திகள் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- "செந்தில் பாலாஜிக்கு உதவுகிறேனா?" - கொந்தளித்து வீடியோ வெளியிட்ட துர்கா ஸ்டாலினின் சகோதரர்!
செந்தில்பாலாஜிக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்த இஎஸ்ஐ மருத்துவ குழுவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று துர்கா ஸ்டாலினின் சகோதரர் மருத்துவர் ராஜாமூர்த்தி தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு இஎஸ்ஐ மருத்துவர்களை அனுப்பியது நான்தான் என்று முடிந்தால் நிரூபியுங்கள் என்று சவால் விடுத்துள்ளார்.என்னை துர்கா ஸ்டாலினின் அண்ணண் என்று சொல்கிறார்கள். ஒரு அறிவே இல்லாமல் நான் துர்கா ஸ்டாலினின் அண்ணன் சொல்கிறார்கள். நான் அவரின் தம்பி எனவும் ராஜாமூர்த்தி கூறியுள்ளார். மேலும் படிக்க
- ”குஷ்பு கோபம் நியாயம்தான்.. ஆனால் மல்யுத்த வீராங்கனைகளுக்காக வரவில்லையே?” - கே.எஸ். அழகிரி
நடிகை குஷ்புவிற்கு வரும் கோபத்தை மெச்சுகிறேன். ஆனால், மல்யுத்த வீராங்கனைகளுக்காக ஏன் கோபம் வரவில்லை? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். பா.ஜ.க.வில் இருக்கும் குஷ்பு தன்னை ஒருவர் தரக்குறைவாக பேசியதற்காக வருத்தத்தை தெரிவித்துள்ளார். அந்த செய்தி வெளியான உடனேயே தி.மு.க. அந்த நபரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கிறது. அதற்காக தி.மு.க.வை பாராட்டுகிறேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க
- கலைஞர் கோட்டம் திறப்பு விழா: சென்னை வர இருந்த பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் வருகை ரத்து..
பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமாரின் திருவாரூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. திருவாரூரில் கருணாநிதி நூற்றாண்டு விழாவில் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க நிதீஷ்குமார் வருவதாக இருந்தது. இதனிடையே மாநில துணை முதலமைச்சர் தேஜஷ்வி யாதவ் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு வருகை தருவார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தொடரும் மழை... அமைச்சர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு: முதலமைச்சர் சொன்னது என்ன?
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை எதிரொலியாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். மழை எதிரொலியால் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் படிக்க
- கொட்டித்தீர்த்த மழை... சென்னையில் ஜூன் மாத மழை 295 சதவீதம் அதிகம்: வானிலை அப்டேட்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஜூன் மாத மழை 295 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படிக்க