TN Headlines Today: தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை.. சிக்கலில் செந்தில் பாலாஜி..மாநிலச் செய்திகளின் ரவுண்ட்-அப் இதோ..!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகள் மூடப்படுமா...? - அமைச்சர் முத்துசாமி பதில்...!
தமிழ்நாட்டில் 500 மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். மேலும் டாஸ்மாக் மூலம் அரசுக்கு அதிக வருமானம் வரவேண்டி இலக்கு நிர்ணயிப்பதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் சுமார் 5,329 மதுக்கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த மது விலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு - நிவாரணம் அறிவித்த முதல்வர்..!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாலையில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, ரூபாய் 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 25 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் படிக்க
- இன்று 13 மாவட்டங்கள்; நாளை 9 மாவட்டங்கள்: லேட்டஸ்ட் கனமழை அப்டேட் இதோ..
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி - மேல் முறையீடு செய்த அமலாக்கத்துறை: நாளை மறுநாள் விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.இந்த மேல் முறையீட்டில், சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுநாள் அதாவது ஜூன் மாதம் 21ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. மேலும் படிக்க
- 4 ஆயிரம் பணியாளர்கள்.. 24 மணி நேர கண்காணிப்பு.. எந்த மழையையும் எதிர்கொள்ள தயார்
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் மழை வெளுத்து வருகிறது. இதனால், பல இடங்களில் மழை நீர் குளம்போல சாலைகளில் தேங்கியுள்ளது. இந்நிலையில் எந்த மழையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என்று வருவாய் மற்றும் பேரிடர்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.மாநகராட்சியில் இருந்து 4 ஆயிரம் களப்பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க