TN Headlines Today: கலைஞர் நூற்றாண்டு மாரத்தான் கின்னஸ் சாதனை.. 7 நாட்களுக்கு மழை .. இதோ முக்கியச் செய்திகள்!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
TN Headlines Today:
கின்னஸ் சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு மாரத்தான்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம் கடந்த ஜூன் 3-ஆம் தேதி தொடங்கியது. இதனிடையே திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு மாரத்தான் போட்டியானது தொடங்கியது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மொத்தம் 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., ஆகிய 4 பிரிவுகளில் இந்த போட்டியானது நடைபெற்றது. அனைத்து பிரிவுகளும் கருணாநிதி நினைவிடம் தொடங்கி தீவுத்திடல் மைதானத்தில் முடிவடைந்தது.மேலும் வாசிக்க..
ஆடிக்கிருத்திகைக்கு தயாரான திருத்தணி
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(வி)லிட், காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் ஆடிக்கிருத்திகை பண்டிகையை முன்னிட்டு திருத்தணிக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்தார்.மேலும் வாசிக்க..
குமரியில் பாசனத்திற்கு நீர் இல்லை
அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட குடிநீர் திட்டத்தை நிறைவேற்றாத திமுக அரசிற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நீரின்றி அமையாது உலகு" என்பதற்கு இலக்கணமாக ஒரு காலத்தில் நீர் நிரம்பி காணப்படும் செழிப்பான பகுதியாகத் திகழ்ந்த கன்னியாகுமரி மாவட்டம், இன்று விடியா திமுக அரசின் நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாக, விவசாயத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமலும், பொதுமக்களுக்குத் தேவையான குடிதண்ணீர் கிடைக்காமலும் தவிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
11 திருப்பதிகம் பாடல்களை பாடி தனியார் பள்ளி மாணவர்கள் உலக சாதனை
கரூரில் ஒரே நேரத்தில் 11 திருப்பதிகம் பாடல்களை 15000 முறை பாடி தனியார் பள்ளியை சேர்ந்த தமிழ் இசை படிக்கும் 1250 மாணவ, மாணவிகள் அசத்தியுள்ளனர். ஆன்மீக பக்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியன் நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளது . கரூர் மகா அபிஷேக குழு சார்பில் 25 -வது ஆண்டு தெய்வ திருமண விழா கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஒரு பகுதியாக கரூர் பரணி பார்க் பள்ளியில் தமிழ் இசை படிக்கும் 1250 மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து திருக்கருவூர் பதிகம் என்ற திருஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகம் 11 பாடல்களை ஒவ்வொரு மாணவ மாணவிகளும் 1.15 மணி நேரத்தில் 12 முறை பாடி மொத்தம் 15000 முறை பாடி அசத்தி உள்ளனர்.மேலும் வாசிக்க..