TN Headlines Today: அடுத்த 7 நாட்களுக்கு மழை...அமைச்சர் அன்பில் மகேஷ் டிஸ்சார்ஜ்...முக்கிய செய்திகளின் ரவுண்டப் இதோ!
TN Headlines Today: தமிழ்நாட்டில் இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்.
- Rain Alert: அடுத்த 7 நாட்கள்... தமிழ்நாட்டில் விடாமல் பெய்யப்போகும் மழை.. அலர்ட் செய்த வானிலை மையம்..!
இன்று வெளியாகி உள்ள சென்னை வானிலை மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- 1000 Rs Scheme: 1.54 கோடி விண்ணப்பங்கள்.. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மாற்றம்.. அடுத்த முகாம் எப்போது..?
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 54 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நடத்தினார். அதன் முடிவில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், வருவாய்த் துறையின் கீழ் சமூகப் பாதுகாப்பு திட்டத்தில் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கும், இந்தத் திட்டத்தில் விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை அளிக்கப்பட்டது. மேலும் படிக்க
- TN CM's police Award: காவல்துறையின் 6 பேருக்கு முதலமைச்சரின் சுதந்திர தின விருது..! யார்? யாருக்கு?
சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உள்பட 6 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் சுதந்திர தின விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பலருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் படிக்க
- Minister Anbil Mahesh: அமைச்சர் அன்பில் மகேஷ் நலமா? பெங்களூருவில் குவிந்த திமுக பிரமுகர்கள்.. நிலவரம் என்ன?
பெங்களூர் நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை, நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காரிமங்கலம் பகுதியில் பயணம் மேற்கொண்ட போது லேசான நெஞ்சு வலி ஏற்ப்பட்டதால் அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் படிக்க
- ஜெயலலிதா தாக்கப்பட்டதும், சேலை இழுக்கப்பட்டதும் உண்மையா? சம்பவத்தை நேரில் பார்த்த திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி..!
சென்னை ( Chennai ) : சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1989ம் ஆண்டு சம்பவம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் அரசியலில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. தமிழிசையும் அரசியலில் இருக்க வாய்ப்பு இல்லை. மேலும் படிக்க