மேலும் அறிய

ஜெயலலிதா தாக்கப்பட்டதும், சேலை இழுக்கப்பட்டதும் உண்மையா? சம்பவத்தை நேரில் பார்த்த திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி..!

1989ம் ஆண்டு நடந்த சட்டசபை தொடரில் ஜெயலலிதா தாக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து தற்போது பெரும் பரபரப்பான விவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே
 
சென்னை ( Chennai ) : சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் திருச்சி எம்.பி.யுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1989ம் ஆண்டு சம்பவம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேசிய மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் அரசியலில் இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. தமிழிசையும் அரசியலில் இருக்க வாய்ப்பு இல்லை.
 
நடந்தது என்ன?
 
மூப்பனார் காங்கிரஸ் கட்சி தலைவர். தமிழிசை தந்தை குமரி ஆனந்தன் துணை தலைவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின் கலைஞர் முதலமைச்சர். ஜெயலலிதா பிரதான எதிர்கட்சி தலைவர். நான் பிரதான எதிர்கட்சியின் துணை தலைவர். சட்டமன்றத்தில் தற்போது இருப்பது போல் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது.

ஜெயலலிதா தாக்கப்பட்டதும், சேலை இழுக்கப்பட்டதும் உண்மையா? சம்பவத்தை நேரில் பார்த்த திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி..!
 
கலைஞர் பட்ஜெட் வாசிக்கும் போது
 
கலைஞர், அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில் ஜெயலலிதா அருகில் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் அமர்ந்து இருந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்த பட்ஜெட்டை டேபிள் போல் வைத்து வாசித்தார். போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பட்ஜெட் வாசிக்க விடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது.
 
ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்சனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கலைஞர் பட்ஜெட் வாசிக்கும் போது, பின்னால் இருந்த ஒரு எம்.எல்.ஏ. பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே கலைஞர் சத்தம் போட்டு திரும்பும் போது கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. அப்போது தடுமாறினார். உடனே மூத்த அமைச்சர்கள் கலைஞரை அழைத்து சென்று விட்டனர். பின்னால் இருந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கலைஞர் முகத்தில் குத்தி தாக்கி விட்டதாக நினைத்துவிட்டனர். இதனால் பட்ஜெட் புத்தகங்களை வீசினார். நாற்காலி எல்லாம் எடுத்து வீச முடியாது. மைக்கை உடைத்து புத்தகங்களை வீசி கொண்டு இருந்தனர். 
 
அடி தடியோ ரத்த காயங்களோ
 
ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக நானும் அப்போதைய அதிமுக கொறடா கே.கே.எஸ்.எஸ்.ஆர் நின்றோம். அப்போதும் சில புத்தகங்கள் ஜெயலலிதா தலையில் விழுந்தது. என் மீதும் விழுந்தது. புத்தகம் விழுந்ததால் தலை களைந்தது உண்மை. வீட்டிற்கு போகலாம் என்றதும் ஜெயலலிதா சரி என்றார். உடனே பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம். சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மை தான்.  ஆனால் அடி தடியோ ரத்த காயங்களோ கிடையாது. கலைஞர் முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும் ஜெயலலிதா சேலை பிடித்து இழத்தாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர்.
 
ஜெயலலிதா தாக்கப்பட்டதும், சேலை இழுக்கப்பட்டதும் உண்மையா? சம்பவத்தை நேரில் பார்த்த திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி..!
ஆனால் இந்த 2 சம்பவமும் உண்மை கிடையாது. கலைஞர் முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையை பிடித்து இழக்கவும் இல்லை. கூச்சல், குழப்பம், புத்தகங்கள் வீச்சு நடந்தது உண்மை. இது தான் சட்டமன்றத்தில் 35 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போது நடந்ததை பார்த்தவர்கள் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் தான். முப்பனார் உயிருடன் இல்லை. குமரி ஆனந்தனை கேட்டால் சொல்லுவார். இது பற்றி குமரி ஆனந்தன் மகள் தமிழிசைக்கு என்ன தெரியும். நிர்மலா சீத்தாராமனுக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. பாராளுமன்றத்தில் மகாபாரதம், பாஞ்சாலி கதை வந்ததும் நிர்மலா சீத்தாராமன் ஒரு கதையை சொல்கிறார். 
 
குமரி ஆனந்தன் மீது புத்தகங்கள் 
 
மணிப்பூரில் இன்னமும் அமைதி திரும்பவில்லை. 100 நாளுக்கு மேலாக விட்டது. 200 பேருக்கு மேல் கொல்லப்பட்டு உள்ளனர். 40 ஆயிரம் பேர் முகாமில் வைக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டு உள்ளது. இன்னும் அமைதி திரும்பவில்லை. பிரதமர் ஒரு நாள் கூட அங்கு சென்று பார்க்கவில்லை. எந்தவித உணர்ச்சியை கூட வெளி காட்ட வில்லை. பாராளுமன்றத்தில் கூட 2 நிமிசம் கூட மணிப்பூர் பற்றி பிரதமர் பேசவில்லை. பேச்சாளர் போல் பேசினாரே தவிர நாட்டின் பிரதமர் மாதிரி பதில் இல்லாதது வருத்தத்தக்கது. குமரி ஆனந்தன் மீது புத்தகங்கள் வீசியதில் அடிப்பட்டு இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
ஜனவரி 25ஆம் நாள் தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைபிடிக்கப்படும்- தமிழ் வளர்ச்சித் துறை
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
India Squad For Zimbabwe Series Announced: ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடர்.. ரோஹித், கோலிக்கு இடம் இல்லை..கேப்டனாக சுப்மன் கில்!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Embed widget