TN Headlines: ஆனந்த் சீனிவாசனுக்கு காங்கிரஸில் புதிய பொறுப்பு; பாஜகவுடன் த.மா.க கூட்டணி - முக்கிய செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
- TNPSC Group 4: இன்னும் 2 நாட்கள்தான்; 6,244 பணியிடம்- டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?
அரசுத் துறைகளில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள நிலையில், இதற்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? பார்க்கலாம். தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 11 வகையான பணிகளுக்கு குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
- தமிழ்நாடு காங்கிரஸில் ஆனந்த் சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு - அதிரடியாக வெளியான அறிவிப்பு!
கடந்த சில வாரங்களாக தமிழ்நாடு காங்கிரஸில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. முன்னதாக, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரிக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை மாநிலத் தலைவராக இருந்த கோபண்ணாவுக்கு பதிலாக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. மேலும் படிக்க
- TN Rain Alert: மழை ஒரு பக்கம்.. உச்சபட்ச வெயில் ஒரு பக்கம்.. அவதியில் மக்கள்.. வானிலை சொல்லும் தகவல் என்ன?
தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும், தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள், ஏனைய வடதமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் படிக்க
- நான் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப ஆட்சிக்கு எதிராகவும் லேகியம் விற்கிறேன் - அண்ணாமலை
விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மயிலம் சாலையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் பாதயாத்திரையாக நடந்துசென்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது பொதுமக்கள் பலரும் அவரிடம் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். சிலர், அண்ணாமலையுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் படிக்க
- Selvaperunthagai: ” மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக கூட்டணி” - ஜி.கே வாசனை சாடிய தமிழக காங்கிரஸ்!
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்தது மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய ஜி.கே வாசன், “ த.ம.கா கட்சி மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டத்தில் இருந்து தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் படிக்க