மேலும் அறிய

Selvaperunthagai: ” மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக கூட்டணி” - ஜி.கே வாசனை சாடிய தமிழக காங்கிரஸ்!

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக, இன்று ஜி. கே. வாசன் வகுப்புவாத பாஜகவில் சுயநலத்தோடு கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்தது மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவிப்பை வெளியிட்டார். அப்போது பேசிய ஜி.கே வாசன், “ த.ம.கா கட்சி மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டத்தில் இருந்து தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், த.ம.காவின் கருத்துகளை ஆலோசனை நடத்தி மக்கள் நலன், இயக்க நலன், வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்று செயல்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு மக்கள் மீதும் உலகத் தமிழர்கள் மீதும் அக்கறை கொண்ட கட்சியுடன் அங்கம் வகிக்க இந்த முடிவை எடுத்துள்ளோம்” என குறிப்பிட்டிருந்தார். 

இதற்கிடையில் த.மா.க பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்துள்ளது மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிரானது என காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது அறிக்கையில், “தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவர்களை சந்தித்து பா.ஜ.க. கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பா.ஜ.க.வுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டு சேர்ந்திருக்கிறது.

மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ்-மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996 இல் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் தில்லிக்கு த.மா.கா.வில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று அன்னை சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார்.

ஏப்ரல் 1999 இல் பிரதமராக இருந்த அடல்பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரசில் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அன்னை சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த. ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை  ஏற்பட்டது.

அன்று வகுப்புவாத பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பா.ஜ.க.வில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் இயக்கத்தில் மக்கள் தலைவர் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் அன்னை சோனியா காந்தி வழங்கியிருக்கிறார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Thirumavalavan Aadhav Arjuna : பத்தில் ஒருவர் ஆதவ் அர்ஜுனா.. விஜய் மீது சங்கடமா.. உடைத்து பேசிய திருமா!
Ponmanickavel :”வயிறு எரியது!  கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
Ponmanickavel :”வயிறு எரியது! கோவில் நிதியை வைத்து ஊழல்..” கொதித்தெழுந்த பொன்மாணிக்கவேல்
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
WTC Points Table: பலத்த அடி வாங்கிய இந்தியா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கடும் சரிவு
"அவங்களோட பங்கு ரொம்ப முக்கியம்" மாற்றுத் திறனாளிகளுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா புகழாரம்!
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Ind vs Aus 2nd Test : இதெல்லாம் ஒரு டார்கெட்டா! அசால்ட்டாக அடித்து முடித்து ஆஸ்திரேலியா.. இந்திய அணி படுதோல்வி
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Thanjavur: இப்படி ஒரு மாநகராட்சியா! தூய்மை பணியாளர்கள் தான் முக்கியம்.. முழு உடல் பரிசோதனை முகாம்
Embed widget