TN Headlines: பாஜகவில் இணைந்தார் விஜயதரணி; இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - முக்கிய செய்திகள்!
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
![TN Headlines: பாஜகவில் இணைந்தார் விஜயதரணி; இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - முக்கிய செய்திகள்! Tamil Nadu latest headlines news till afternoon 24th February 2024 flash news details here TN Headlines: பாஜகவில் இணைந்தார் விஜயதரணி; இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - முக்கிய செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/24/d31ac5ce45a1451ebc0e0a1bc005ca031708765960663102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
- Vijaya Dharani: பாஜகவில் இணைந்தார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி..
காங்கிரஸ் கட்சி சார்பில் 3 முறை சட்டமன்ற் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதாரணி இன்று பா.ஜ.க வில் இணைந்தார். எல்.முருகன் முன்னிலையில் டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் அவர் பாஜகவில் இணைந்தார். மேலும் படிக்க
- TN Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு - சென்னையில் எப்படி? இன்றைய நிலவரம்
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும் நாளையும் ஒரு சில மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
- TN Railway Stations: உலக தரத்தில் அப்கிரேட் ஆகும் 34 தென்னக ரயில் நிலையங்கள் - மொத்த லிஸ்ட் இதோ!
நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்தும், “அம்ருத் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை கடந்த ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதுமுள்ள போக்குவரத்து நிறைந்த, ஆயிரத்து 318 ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட தேர்ந்தெடுக்கப்பட்டன. முதற்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் படிக்க
- Chief Minister M. K. Stalin: ”கடல்நீரை குடிநீராக்கும் திட்டதால் 10 லட்சம் மக்கள் பயன்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நெம்மேலியில் ரூ.2,465 கோடியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நான் அரசு பொறுப்பேற்று முதன்முதலில் கவனித்த துறை மட்டுமல்ல, வளர்த்த துறை இந்தத் துறை. அதோடு என்னுடைய இதயத்திற்கு நெருக்கமான கடல் நீரை குடிநீராக்கக்கூடிய திட்ட தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் படிக்க
- Kachchatheevu: கச்சத்தீவு திருவிழாவை புறக்கணித்த தமிழக மீனவர்கள்! களையிழந்த அந்தோணியார் ஆலய வைபவம்!
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது ஆகும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)