மேலும் அறிய

TN Rain Alert: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை: தயாராகுங்க மக்களே!

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (13.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த மூன்று தினங்களில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

13.09.2023 மற்றும் 14.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

15.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

16.09.2023 மற்றும் 17.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

18.09.2023 மற்றும் 19.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

வானூர் (விழுப்புரம்) 9, BASL முகையூர் (விழுப்புரம்) 7, BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 5, திருக்கோயிலூர் (கள்ளக்குறிச்சி), கீழ்அணைக்கட்டு (தஞ்சாவூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), RSCL-2 KEDAR (விழுப்புரம்), RSCL-2 நெமூர் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), புதுச்சேரி தலா 4,

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

வங்கக்கடல் பகுதிகள்:

13.09.2023: மத்திய வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

14.09.2023 மற்றும் 15.09.2023:  இலங்கை கடலோரப்பகுதிகள்,  தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.09.2023:இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

17.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள்,  தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

Sundar Pichai: இதுதான் என் அப்பா; எனக்கு அனுப்புன முதல் இ-மெயில்.. 25 ஆண்டுகளுக்கு பிறகு சுவாரஸ்யத்தை பகிர்ந்த சுந்தர்!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand | Amitshah on Mallikarjun Kharge | ”சபதம் போட்டீங்களே கார்கே! இது ஓவர் PERFORMANCE” அமித்ஷா தடாலடிHaryana BJP : முரண்டு பிடித்த சீனியர்கள் தூக்கியடித்த ஹரியானா பாஜக..குதூகலத்தில் காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
Udhayanidhi: இனி உச்சம்தான்! அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதிக்கு என்ன இடம் தெரியுமா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
IND vs BAN: எகிறும் விறுவிறுப்பு! களைகட்டும் கடைசி நாள் ஆட்டம் நாளை! வெல்லுமா இந்தியா?
Aarti Ravi :  பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Aarti Ravi : பொறுமையாக இருந்தால் தப்பு செய்ததாக அர்த்தம் இல்லை...மெளனம் கலைத்த ஆர்த்தி ரவி
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
Game Changer: செம குத்து! கேம் சேஞ்சர் படத்தின் ஆட்டம் போட வைக்கும் ராம் மச்சா மச்சா பாடல் ரிலீஸ்!
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
4,17,999 குடும்பத்தலைவிகள் பயன் பெற்றுள்ளனர்... நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் தஞ்சை கலெக்டர் கூறியது எதற்காக?
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
உருவத்தில் மட்டும் ஒற்றுமை இல்ல...! திறமையிலும் ஒற்றுமை... விழுப்புரத்தை கலக்கும் இரட்டை சகோதரிகள்
Marriage Assistance Schemes: தங்கம், பணம்: திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் சீர்! என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு தெரியுமா?
திருமணம் செய்வோருக்கு அரசே அளிக்கும் தங்கம், பணம்: என்ன திட்டத்துக்கு எவ்வளவு?
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
 பள்ளிகளில் இனி அனுமதிக்கமாட்டோம் - இயற்கை வழி வாழ்வியல் கூட்டமைப்பு எச்சரிக்கை
Embed widget