மேலும் அறிய

TN Weather Update: "இனி வறண்ட வானிலையே" தமிழ்நாட்டை விட்டு விலகும் வடகிழக்கு பருவமழை!

தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. 

ஜனவரி 17 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதி, தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை  பெய்யக்கூடும்.   வடதமிழக மாவட்டங்கள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

அதேபோல் வரும் 20 மற்றூம் 21 ஆம் தேதி, தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின்  ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.  அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையை பொறுத்தவரை கடந்த இரண்டு நாட்களாக அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் ஒரு சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கிறது. 

காற்று மாசு:

நேற்று போகி பண்டிகை முன்னிட்டு பலரும் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை எரித்து கொண்டாடினர். அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் இருப்பதால் போகி கொண்டாட்டத்துடன் சேர்ந்து சென்னை முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இதனால் சென்னையில் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மணலியில் 287 புள்ளிகள் கொண்டு காற்றின் தரம் பதிவானது. இது மிகவும் மோசமான குறியீடாகவும், இந்த காற்று சுவாசிக்க தரமற்றது. அதேபோல பெருங்குடியில் எண்ணூர் 226, அரும்பாக்கம் 207, ராயப்புரம் 195 என பதிவானது.

காற்று தரக்குறியீடு 100 வரை இருந்தால் அது சுவாசிக்க ஏதுவானது. 100 ஐ கடந்து பதிவானால் அது சற்று மாசடைந்துள்ளது என அர்த்தம். காற்று தரக்கூறியீடு 201 முதல் 300 க்கு இடையில் இருந்தால் "காற்று தரம் மோசமாக இருப்பதாகவும்", 301 முதல் 400 இருந்தால் "காற்று தரம் மிகவும் மோசமாக இருப்பதாகவும்", மற்றும் 401 முதல் 500 இருந்தால் "காற்று தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும்" கருதப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்.. ஏப்ரல் 14 வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
சென்னையில் 100 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்.. ஏப்ரல் 14 வரை வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
’’பள்ளிகள்கூட பாதுகாப்பில்லை; பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது’’- அன்புமணி கண்டனம்
TN Assembly Candidates : எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
நான் ஒன்றும் நிதிஷ் குமார் அல்ல! - டீக்கடையில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ‘ஷாக்’ பதில்!
நான் ஒன்றும் நிதிஷ் குமார் அல்ல! - டீக்கடையில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ‘ஷாக்’ பதில்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Candidates : எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
எந்த தொகுதியில் எத்தனை பேர் போட்டி.? களம் இறங்கும் வேட்பாளர்கள் இத்தனை பேரா.? முழு லிஸ்ட் இதோ..
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
ரூ.1 கோடி உதவித்தொகை! ஏழை மாணவர்கள் கல்விக்கு அரசு அதிகம் செலவழிக்க வேண்டும் - விஐடி வேந்தர் பேச்சு
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Embed widget