Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்பு! ஒரு நாள் சம்பளத்தை வழங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம்!
மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க உள்ளதாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
![Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்பு! ஒரு நாள் சம்பளத்தை வழங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம்! Tamil Nadu IAS Officers' Association Willingness to contribute one day's salary towards Chief Ministers' Public Relief Fund - Michaung Cyclone Relief Measures Cyclone Michaung: மிக்ஜாம் புயல் பாதிப்பு! ஒரு நாள் சம்பளத்தை வழங்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/07/2769be83dd8779c088332d26d14472501701960452073572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 3, 4-ம் தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதனால், பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மக்கள் வெளியில் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். பால், உணவுபொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ரூபாய் 561 கோடி ஒதுக்கீடு:
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. இதனிடையே, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.
ஆலோசனையை முடித்துவிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். புயல், மழை பாதிப்பிலிருந்து தமிழகம் மீள அனைத்து உதவிகளும் செய்யப்படும். சென்னை வெள்ள மேலாண்மை பணிகளுக்காக ரூ.561 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய விரைவில் ஆய்வுக்குழு தமிழகம் வரும்” என்றும் தெரிவித்திருந்தார்.
ஒரு நாள் சம்பளத்தை வழங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்:
இந்நிலையில், மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க உள்ளதாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Tamil Nadu IAS Officers' Association Willingness to contribute one day's salary towards Chief Ministers' Public Relief Fund - Michaung Cyclone Relief Measures#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/e6QFSz4b49
— TN DIPR (@TNDIPRNEWS) December 7, 2023
இது தொடர்பாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் கூறுகையில், மிக்ஜாம் புயலால் தமிழகம் முழுவதும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சூழலில், மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவியாக தமிழ்நாடு ஐஏஎஸ் சங்க உறுப்பினர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளனர். முன்னதாக, பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
மேலும் படிக்க: Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
மேலும் படிக்க: Schools Colleges Holiday: தமிழ்நாட்டில் நாளை எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - முழு விவரம் உள்ளே
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)