TN Rain Alert: தமிழகத்தில் மழை எப்போ? பொதுமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன வானிலை மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 3) முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூலை 7 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெயிலில் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 2, 2022
இதனிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஜூலை 3) முதல் ஜூலை 7 ஆம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 2, 2022
Past 24 hrs Realised Rainfall (mm) over TamilNadu pic.twitter.com/JRxdub96aX
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 3, 2022
அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 2, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) July 3, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்