Tamilnadu Roundup: சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய்.. பேனர்கள் வைக்க கட்டுப்பாடு - தமிழகத்தில் இதுவரை
தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று மக்கள் சந்திப்பைத் தொடங்குகிறார் - திருச்சியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
நடிகர் விஜய் இன்று பெரம்பலூர், அரியலூர் மற்றும் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்
தீபாவளி பண்டிகைக்காக நாடு முழுவதும் 150 சிறப்பு ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட 150 சிறப்பு ரயில்களில் 10 ரயில்கள் தமிழ்நாட்டில் இயக்கப்படும்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கேரளாவிற்கு மண் கடத்தல் - அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தல்
சென்னையில் பொது இடங்கள், சாலைகளில் அனுமதியின்றி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை - வடகிழக்கு பருவமழை என்பதால் மாநகராட்சி எச்சரிக்கை
அபுதாபி நோக்கிச் செல்லும் வழியில் திடீரென சென்னையில் தரையிறங்கிய இந்தோனேசியா போர் விமானங்கள் - வீரர்களுக்கு ஓய்வு தேவைப்பட்டதால் தரையிறக்கம்
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடையை உடைத்து உணவு தேடிய கரடி
கோவையில் இருந்து கீழ்குந்தா நோக்கி வந்த அரசுப்பேருந்தை மறித்த காட்டு யானைகள் - திடீரென பேருந்தை விரட்டியதால் பரபரப்பு
திருச்செந்தூரில் புர்தா அணிந்த பெண்ணை ஏற்ற மறுத்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழகம் பரிந்துரை
உலக தடகள சாம்பியன்ஷிப்; தமிழக வீரர் ப்ரவீன் சித்ரவேல் பங்கேற்பு





















