மேலும் அறிய

"சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல" அடித்து சொல்லும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தவர் வள்ளலார் என தமிழ்நாடு ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல என்றும் சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ரவி, "சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை. பெரியவர், சிறியவர் இல்லை. சிலர், இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கிறார்கள். அதற்கு அவசியம் இல்லை. இதை பற்றி தெரியாதவர்கள் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர்.

"சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை"

சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதி அல்ல. சாதி பார்ப்பவர்கள் சனாதனவாதியாக இருக்க முடியாது. நமது நாட்டின் தனித்துவம் என்னவென்றால் தர்மத்திற்கு, உண்மைக்கு எதிராக நிலை ஏற்படுகின்றதோ அப்போது இறைவனே ஒரு அவதாரம் எடுத்து வருகின்றார்.

நமது நாட்டில் அதேபோன்று தான் வள்ளலார் பெருமானும் அவதாரத் செய்தார். வேதத்தில் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது. இந்த நாட்டில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர் இல்லை தாழ்ந்தவர் இல்லை என்று. 

ஆங்கில ஆக்கிரமிப்பால் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற நமது தத்துவ குடும்ப வாழ்வு சிதைக்கப்பட்டது.  அந்த காலகட்டத்தில் தான் வள்ளலார் பெருமான் அவதரித்தார். நமது அடையாளத்தையும் தர்மத்தையும் இழந்து இருந்த காலத்தில் ஒருங்கிணைத்து வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறி ஏற்ற தாழ்வு நிலையை உடைத்து அனைவரையும் ஒன்றிணைத்தவர் வள்ளலார்.

தமிழ்நாடு ஆளுநர் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் பல அவதார புருஷர்கள் அவதரித்துள்ளனர். அவர்கள் தமிழ்நாட்டில் பிரிந்திருந்த மக்களை ஒருங்கிணைத்து சென்றுள்ளனர். அதனால் தான் பாரதத்தின் புன்னிய பூமி தமிழ்நாடு. ஆன்மீக பூமி தமிழ்நாடு. என்றைக்கும் இல்லாத போன்று இன்றைய நாளில் வள்ளலாரின் தேவை உலகத்திற்கு அதிகமாக தேவை படுகின்றது. அந்த அளவு உலகம் பிரிந்து கிடக்கின்றது.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. பல மக்கள் போரால் கொலை செய்யப்படுகின்றனர். வழிகாட்டுதல் இல்லாததால் மன அழுத்தத்தால் உயிரிழக்கின்றனர்.

இங்கு மக்களுக்கு போதிய நிம்மதி இல்லை. பொதுமக்கள் மிகுந்த மன வருத்தத்துடன் வாழ்ந்து வருகின்றனர். வள்ளலார் நமக்கானவர் மட்டும் அல்ல உலக அமைதிக்கானவர். ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் பலநாடுகளால் ஒதுக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளை சேர்த்தவர் பாரத பிரதமர் மோடி. 

பல நாடுகள் கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசிகளை வைத்து பணம் சம்பாதிக்க திட்டம் போட்ட நிலையில் 120 நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைத்து ஜீவகாருண்ய கருணையால் அனுப்பிவைத்தார்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Embed widget