"தமிழ் மக்கள் மனதில் இருந்து சிவபெருமானை அழிப்பது சாத்தியமில்லை" ஆளுநர் ரவி பரபர பேச்சு
சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம் என்றும் அதில் சமுதாய வேறுபாடு கிடையாது என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு என்ற பெயரில் ஆன்மீகம் அறிவியல் பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை சிலர் அழிக்க நினைப்பதாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம் என்றும் அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் என்ன பேசினார்?
சென்னையில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் இன்று 6வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜகவின் தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி. நட்டா, தமிழக பாஜக தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ஆளுநர் ரவி, "சைவ சித்தாந்தம் தமிழுக்கு அடையாளம். அதில் சமுதாய வேறுபாடு கிடையாது. பக்தி நிலையிலேயே சிவனை அடைய முடியும். பக்தியின் மூலம் ஆன்மீகம் காப்பாற்றப்படுகிறது. சனாதன தர்மமே ஆன்மீகத்தின் அடையாளம். அனைவரும் ஒன்று என சனாதனம் வலியுறுத்துகிறது.
"ஆன்மீகத்தை அழிக்க நினைக்கிறார்கள்"
பகுத்தறிவு என்ற பெயரில் தமிழர்களிடமிருந்து ஆன்மீகம் மற்றும் பக்தியை அகற்ற சதி நடந்து வருகிறது. ஆனால், தமிழ் மக்கள் மனதில் இருந்து சிவபெருமானை அழிப்பது சாத்தியமில்லை. ஆன்மீகம் அறிவியல்பூர்வமானதாக இல்லை எனக்கூறி அதை அழிக்க நினைக்கிறார்கள். காஷ்மீரோ, தமிழகமோ, சைவ சித்தாந்தத்தை பரப்புவது முக்கியமானதாக கடந்த காலத்தில் இருந்தது" என்றார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மத்திய அமைச்சர் நட்டா, "சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஆன்மீகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த மாநாடு உள்ளது. இது உண்மையான கல்வி அறிவியல், ஆன்மீகம் மற்றும் சேவையின் ஒருங்கிணைப்பில் வேரூன்றியுள்ளது.
இன்று சென்னையில் உள்ள SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 6வது சர்வதேச சைவ சித்தாந்த மாநாட்டில் உரையாற்றினேன்
— Jagat Prakash Nadda (@JPNadda) May 3, 2025
சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஆன்மீகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற முடியும் என்பதற்கான சக்திவாய்ந்த நினைவூட்டலாக இந்த மாநாடு உள்ளது. இது உண்மையான கல்வி… pic.twitter.com/hwVkyUOFae
இத்தகைய அர்த்தமுள்ள மற்றும் நுண்ணறிவுள்ள மாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தர்மபுரம் ஆதீனங்கள் மற்றும் SRM நிறுவனத்தை நான் பாராட்டுகிறேன். சைவ சித்தாந்தத்தின் காலத்தால் அழியாத போதனைகள் உலகை அவற்றின் நித்ய ஞானத்தால் தொடர்ந்து ஒளிரச் செய்யட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.




















