மேலும் அறிய

உழவர்களுக்கு எப்போது விடியும்? தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை மீட்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்டு, கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை எவ்வித தாமதமுமின்றி தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நவரைப் பருவ சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக கொள்முதல் செய்யப்படாததால் உழவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கோடைப் பருவத்தில் உழவர்கள் அரும்பாடுபட்டு உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாமல் தாமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் திசம்பர் & ஜனவரி மாதங்களில் விதைத்தோ, நடவு நட்டோ ஏப்ரல்   மற்றும் மே மாதங்களில் நெல் அறுவடை செய்யப்படுகிறது. சம்பா பருவத்திற்கு பிந்தைய இந்தக் காலம் நவரைப் பருவம் என்றழைக்கப்படுகிறது. நவரைப் பருவ அறுவடை கடந்த 10 நாள்களாக தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர், ஒத்திவாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் கொண்டு வந்துள்ள பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் பெருமளவிலான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகிவிட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தண்டராம்பட்டு, மலமஞ்சனூர் புதூர், கரிப்பூர் ஆகிய இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களிலும் கடந்த இரு வாரங்களாக நெல் கொள்முதல் நடைபெறாததால்  ஒவ்வொரு நிலையத்திலும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் தேங்கிக் கிடங்கின்றன. இந்தப் பகுதியிலும் மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, கள்ளக் குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே நிலை காணப்படுகிறது. கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் எப்போது கொள்முதல் செய்யப்படும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

காஞ்சிபுரம் முதல் கள்ளக்குறிச்சி வரை அனைத்து வட மாவட்டங்களிலும் நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதற்கு காரணம் ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாதது தான். போதிய சரக்குந்துகள் இல்லாததால் தான்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்று கூறும் உணவுத் துறை அதிகாரிகள், இந்தப் பிரச்சினை எப்போது தீரும்? உழவர்களுக்கு எப்போது விடியும்? என்பதைக் கூற மறுக்கின்றனர்.

வட மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் குறித்த காலத்தில் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படாததும், அதனால் கொள்முதல் நிலையங்களில் போதிய இட வசதி இன்றி, நெல் கொள்முதல் நிறுத்தப்படுவதும் இது முதல்முறையல்ல.  பல ஆண்டுகளாகவே இந்த அவலம் தொடர்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தமிழக அரசின் நுகர்பொருள் வாரியம்   நேரடியாக நெல் கொள்முதல் செய்யாமல், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் என்ற மத்திய அரசின் கூட்டுறவு நிறுவனத்திடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்தது தான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்.

தமிழக அரசால் நெல் கொள்முதல் அதிகாரம் அளிக்கப்பட்ட தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்திற்கு எந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதியும் இல்லை. அதனால் அது தமிழ்நாடு அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற தனியார் அமைப்புடன் உடன்பாடு செய்து கொண்டது. இந்த தனியார் அமைப்பின் கட்டமைப்புகளை வைத்தே நிலைமையை சமாளித்து வரும் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், நெருக்கடியான காலக் கட்டங்களில் வட மாவட்ட உழவர்களை அம்போவென கைவிடுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் ரூ.800 கோடிக்கும் கூடுதலாக உழவர்களிடம் நெல் கொள்முதல் செய்த தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம், அதற்கான தொகையை அரசிடமிருந்து பெற்ற பிறகும் உழவர்களிடம் வழங்காமல் ஏமாற்றி வந்தது. இதற்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சியும், உழவர் நல அமைப்புகளும் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து தான் அந்தத் தொகையை உழவர்களுக்கு தமிழக அரசு பெற்றுக் கொடுத்தது. அப்போதே வட மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையத்தை இனியும் தமிழகத்தில் நெல் கொள்முதல் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய பிறகும், அதே அமைப்பையே நெல் கொள்முதல் செய்ய அனுமதித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உலகிற்கு உணவு படைக்கும் கடவுள்களான உழவர்களை கண்ணீர் சிந்தும் நிலைக்கு எந்த அரசும் அழைத்துச் செல்லக் கூடாது. தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்வதில் ஏற்பட்டுள்ள அனைத்து முட்டுக்கட்டைகளையும் தமிழக அரசு போக்க வேண்டும். தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக வட மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் இணையத்திற்கு அளிக்கப்படுள்ள அனுமதியை ரத்து செய்து விட்டு, தமிழக அரசே நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
தமிழகத்தில் நாளை ( 19-08-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின் வாரியம் வெளியிட்ட முழு லிஸ்ட்
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
கோயில் புனித பயணம்.! ரூ.5,000 அள்ளிக்கொடுக்கும் அரசு- யாரெல்லாம் பெறலாம்? விண்ணப்பிக்க வழிமுறை இதோ..
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
5000+ தனியார் துறை வேலைகள்... ஆகஸ்ட் 21-ல் நடக்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
Embed widget