Temporary Teachers: ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வானது புதிதாக பொறுப்பேற்க்கும் தற்காலிக ஆசிரியர்களுக்கும் சேர்த்து அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 12, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 15, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 18, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தொகுப்பூதியம் உயர்வு:
பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் நற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 21 ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியிடங்கள் மற்றும் 2022,2020 ஆம் ஆண்டு காலியாக உள்ள 4 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து மொத்தம் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு இடைநிலை ஆசிரியருக்கு ரூ12000 மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் ஒரு முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000/- தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், தொகுப்பூதியம் உயர்த்தி வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Also Read: 12th Exam Absent: பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்கள்; அரசின் நடவடிக்கை இதுதான்- அமைச்சர் அதிரடி