உங்கள் பகுதியில் கனமழை பாதிப்பா..? உதவி வேணுமா..? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க!
தென்மேற்கு பருவமழை தற்பொழுது அதி தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படை நான்கு குழுவினர் விரைந்துள்ளனர்.
ரெட் அலர்ட்:
கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால், வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கூடுதலாக தேனி மாவட்டத்திற்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தற்பொழுது அதி தீவிரமடைந்துள்ளதால் அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, சாலை மார்க்கமாக தேசிய பேரிடர் மீட்பு படை நான்கு குழுவினர் விரைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை மேலாண்மை மையத்தில் இருந்து தமிழகத்தின் தென்மேற்கு பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும், நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டு குழுக்களும் விரைந்துள்ளனர்.
தொலைபேசி எண் :
கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து பொதுமக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண் மூலம் புகார்களை பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையின் போது தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து ஈடுபடும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படையின் 4 குழுக்கள் அனுப்பப்பட் டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுக்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், இரண்டு குழுக்கள் நீலகிரி மாவட்டத்திற்கும் விரைந்துள்ளனர்.
பேரிடர் தொடர்பான தகவல்களை துறை அலுவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில், மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் செயல்பட்டு வருகின்றன.
பொது மக்கள் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையம் மற்றும் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை முறையே 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களை பதிவு செய்யலாம். கனமழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை செய்திகளை கூர்ந்து கவனித்து செயல்படுமாறும், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்