மேலும் அறிய
Advertisement
கொரோனா 2-வது அலை எல்லை தாண்டிவிட்டது - தமிழக அரசு அதிர்ச்சி தகவல்..
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைதாண்டிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அரியர் தேர்வு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு முன்பாக, அரசு தலைமை வழக்கறிஞரிடம் தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாட்டில் கொரோனா 2-வது அலை தொடர்பாகவும், தடுப்பூசி தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாவும், 2-வது அலையில் கொரோனா வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களால் கணிக்கமுடியவில்லை எனவும் பதிலளித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் போதுமான கொரோனா தடுப்பூசிகள் கையில் இருப்பதாகவும், விரும்பினால் 40 வயதானவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட தயாராக இருப்பதாகவும் கூறினார். ஏற்கெனவே 45 வயதானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion