Tamil Nadu Curfew: ஞாயிறு முழு ஊரடங்கு - திருமணத்திற்கு செல்ல அனுமதி..! ஆனால் ஒரு கண்டிஷன்..!
திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணத்திற்கு செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகளின் அழைப்பிதழ்களைக் காண்பித்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. Corona Third Wave | 3-வது அலையில் சுனாமி வேகம்... கவலை அளிக்கும் புள்ளிவிவரங்கள்.. கொரோனாவைத் தவிர்ப்பது எப்படி?
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கின்போது திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்ல தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. திருமண அழைப்பிதழை காண்பித்து தங்களின் பயணங்களை மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. மேலும், திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட 7 மடங்கு கொரோனா இறப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்
#BREAKING | ஞாயிறு முழு ஊரடங்கின்போது திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு செல்ல அனுமதி https://t.co/wupaoCQKa2 | #TNLockDown | #Corona | #Omicron pic.twitter.com/cWjsnGKI77
— ABP Nadu (@abpnadu) January 8, 2022
தமிழ்நாட்டில் நேற்று 1,36,620 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 8,981ஆக இருந்தது. ஒருநாள் பாதிப்பு 6,983 ஆக இருந்த நிலையில் 1,998 அதிகரித்து 8,981 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் 4,531 பேருக்கு தொற்று உறுதியாகியானது. கொரோனாவால் 8 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 984 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை கூறியிருந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்