TN Bus: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 1,771 பேருந்துகளை வாங்க டெண்டர் கோரியது அரசு..
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆயிரத்து 771 பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஆயிரத்து 771 புதிய பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது.
டீசலில் இயங்கும் BS 6 ரக 3 விதமான பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை போக்குவரத்து கழகத்துக்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் போக்குவரத்து கழகத்துக்கு 347 பேருந்துகளும் வாங்கப்பட உள்ளன.
சேலம் மண்டலத்துக்கு 303 பேருந்துகளும், கோயம்புத்தூர் மண்டலத்துக்கு 115 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
கும்பகோணம் மண்டலத்துக்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்துக்கு 251 பேருந்துகளும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளன.
மொத்தமாக, BS 6 ரக ஆயிரத்து 771 புதிய பேருந்துகளை வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.





















