நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி எடுத்த எம்.பி.க்கள்; ’வருங்காலம் எங்கள் உதயநிதி’ என முழக்கம்
திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார்.
நாட்டின் 18ஆவது மக்களவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி.க்கள் அத்தனை பேரும் தமிழில் உறுதிமொழி எடுத்து வருகின்றனர். மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், பதவியேற்கும்போதே நீட் தேர்வு வேண்டாம் எனவும் முழக்கமிட்டார்.
அதே நேரத்தில், திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார். அதேபோல சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன் உள்ளிட்ட எம்.பி.க்களும் உதயநிதியை வருங்காலம் என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து பதவியேற்ற பெரும்பாலான அமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு ஆகியோரைக் குறிப்பிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை எட்ட முடியவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆதரவுடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.
புதிய அரசு பதவியேற்றதை தொடர்ந்து நடைபெற உள்ள முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர், நேற்று (ஜூன் 24) தொடங்கியது. கூட்டத்தொடர் எட்டு நாட்கள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிய மக்களவை சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
இதற்கிடையே புதிய எம்.பிக்கள் பதவியேற்பு தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நீட் தேர்வு வேண்டாம்
மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன், பதவியேற்கும்போதே நீட் தேர்வு வேண்டாம் எனவும் முழக்கமிட்டார்.
அதே நேரத்தில், திமுக எம்.பி. கதிர் ஆனந்த், வாழ்க தமிழ்நாடு, வெல்க திமுக, வாழ்க தளபதி ஸ்டாலின், வருங்காலம் எங்கள் உதயநிதி என்று முழக்கமிட்டார். அதேபோல சி.என்.அண்ணாதுரை, தரணிவேந்தன் உள்ளிட்ட எம்.பி.க்களும் உதயநிதியை வருங்காலம் என்று குறிப்பிட்டனர். தொடர்ந்து பதவியேற்ற பெரும்பாலான அமைச்சர் உதயநிதி, எ.வ.வேலு ஆகியோரைக் குறிப்பிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
தொடர்ந்து சின்னராஜ், நாமக்கல் மாதேஸ்வரன், ஈரோடு பிரகாஷ், பெரம்பலூர் அருண் நேரு, கரூர் ஜோதிமணி எனப் பலரும் தமிழில் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.