மேலும் அறிய

நெல் மூட்டைக்கு ரூ.60 லஞ்சமா? அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது - அன்புமணி!

நெல் கொள்முதல் நிலையங்களில் தொடரும் கையூட்டு: உழவர்களின் உழைப்பு சுரண்டப் படுவதை அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதையும், உழவர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும் த.வெ.க. அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்., 

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதும், 2 கிலோ நெல் கூடுதலாக  எடுத்துக் கொள்ளப்படுவதும் புதிய அரசிலும் தொடர்வதாக உழவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரும்பாடுபட்டு சாகுபடி செய்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் உழவர்கள் வேதனைப்பட்டு வரும் நிலையில், நெல்லை கொள்முதல் செய்வதற்கும் கையூட்டு வசூலித்து அவர்களை சுரண்டுவருவது நியாயமற்றதாகும்.

தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் கோடை பருவ அறுவடை தீவிரமடைந்துள்ளது. அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் உழவர்கள் பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருப்பதுடன், 40 கிலோ எடை கொண்ட நெல் மூட்டைக்கு கையூட்டாக ரூ.40 முதல் ரூ.60 வரை தர வேண்டியுள்ளது. இது தவிர ஒவ்வொரு மூட்டைக்கும் நிர்ணயிக்கப்பட்ட எடையான 40 கிலோவுக்கு பதிலாக 42 கிலோ  வழங்க வேண்டும் என்றும் கொள்முதல் நிலையப் பணியாளர்கள் கட்டாயப்படுத்தி எடுத்துக் கொள்கின்றனர். இதனால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.150 ரொக்கம், ரூ.125 மதிப்புள்ள நெல் என மொத்தம் ரூ.275 வீதம்  உழவர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது. இந்த அநீதியை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

முந்தைய திமுக ஆட்சியிலும் உழவர்களிடமிருந்து நெல்லும், பணமும் சுரண்டப்பட்டன. அதற்கு எதிராக  பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் குரல் கொடுத்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் இது ஒரு முக்கியப் பிரச்சினையாக உருவெடுத்தது. இன்றைய தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தேர்தல் பரப்புரையின் போதும், அதற்கு முன்பாக பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் போதும், இதை சுட்டிக்காட்டி  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் உழவர்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்துவோம் என உறுதியளித்தார். ஆனால், த.வெ.க. ஆட்சிக்கு வந்த பிறகும் கூட உழவர்கள் சுரண்டப்படுவது தொடர்வது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாட்டில் புதிய நெல் கொள்முதல் பருவம் அக்டோபர் ஒன்றாம் தேதி தான் தொடங்கும். அதையொட்டி தான் புதிய நெல் கொள்முதல் விலையை தமிழக அரசு அறிவிக்கும். அதனால், இப்போது வரை கடந்த ஆண்டில் அறிவிக்கப்பட்ட குவிண்டாலுக்கு ரூ.2500 என்ற விலையில் தான் நெல் கொள்முதல் செய்யப் படுகிறது. இதில் தமிழ்நாடு அரசின் பங்காக ரூ.131 மட்டும் தான் வழங்கப்படுகிறது. ஆனால், அதைவிட  இரு மடங்குக்கும் கூடுதலாக ரூ.275 மதிப்புள்ள பணத்தையும், நெல்லையும் உழவர்களிடமிருந்து நெல் கொள்முதல் நிலையங்கள் சுரண்டுவதை அனுமதிக்க முடியாது. இந்த அநீதி தொடர்வதை அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது.

காவிரி பாசன மாவட்டங்களில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு  ரூ.40 முதல் ரூ.60 வரை கையூட்டு வசூலிக்கப்படுவதை அரசும் ஒப்புக்கொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சில நாள்களுக்கு முன் ஆய்வு செய்த உணவுத் துறை அமைச்சர் வெங்கட்ராமன் அவர்கள், கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வசூலிக்கப்படுவதை  ஒப்புக்கொண்டதுடன், இதை நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் சார்ந்து பார்க்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். நெல் கொள்முதல் நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்ட  அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அது அரசின் கடமை. அந்தக் கடமையிலிருந்து அரசு தவறியதற்காக உழவர்கள் சுரண்டப்படுவதையும், அதை அரசு கண்டும் காணாமல் இருப்பதையும் பொறுப்புள்ள அரசியல் கட்சிகளால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

தமிழ்நாட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குத் தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை; பணியாளர்களுக்கு போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின்  தவிர்க்க முடியாத செலவுகளுக்காக நிரந்தர முன்வைப்புத் தொகையாக ஒவ்வொரு நிலையத்திற்கும் ரூ.20 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். ஆனால், அந்தத் தொகை முறையாக வழங்கப்படவில்லை ர்ன்று கூறப்படுகிறது. இதனால் கொள்முதல் நிலைய செலவுகளை பணியாளர்களே பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. அதே போல், நெல் எடை போடும் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.10 மட்டுமே கூலியாக வழங்கப்படுவது போதுமானது அல்ல. இதனால் தான் நெல் கொள்முதல் நிலையங்களில் கையூட்டு வாங்கப் படுவதாக கூறப்படுகிறது. இந்தக் குறைகள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் ஒவ்வொரு மட்டத்திலும் நடைமுறை சிக்கல்கள் காலம் காலமாக புரையோடிக் கிடக்கின்றன. நெல் கொள்முதல் கட்டமைப்பிலும் அவை ஊடுருவியுள்ளன. அவற்றால் உழவர்கள் பாதிக்கப்படுவதையும்,  சுரண்டப்படுவதையும் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. அனைத்து நடைமுறை சிக்கல்களையும்  அரசு உடனடியாக சரி செய்து கொள்முதல் நிலையங்களில் உழவர்களிடமிருந்து   மூட்டைக்கு ரூ.60 கையூட்டு வசூலிக்கப்படுவதையும், கூடுதலாக நெல் எடுக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை வெளியிட்ட லிஸ்ட்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Embed widget