துணை முதல்வர் உதயநிதிக்கு கடும் காய்ச்சல்.. இருமலால் அவதி.. அய்யோ என்னாச்சு?
கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவதிப்பட்டு வருவதாகவும் எனவே, அவர் கலந்து கொள்ளவிருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை முதலமைச்சரும் திமுகவின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்பட்டு வருவதாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கடும் காய்ச்சலால் அவதிப்படும் உதயநிதி:
அடுத்த சில நாட்களுக்கு, அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதனால், துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நேற்று நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் கூட மேடையில் அமராமல் கீழே போடப்பட்டிருந்த முதல் வரிசையில் அமர்ந்திருந்தார். பொதுக்கூட்டத்திற்கு மாஸ்க் அணிந்து வந்தது, முதல் வரிசையில் தனியே அமர்ந்திருந்தது, காரில் தனியாக பயணம் செய்தது விவாதப் பொருளாக மாறியது.
காய்ச்சல், இருமலால் பாதிக்கப்படும் மக்கள்:
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மே 26ஆம் தேதி வரை, கொரோனாவால் 1,010 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மே 30 நிலவரப்படி 2,710 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் வெளியிட்டது.
இதனால் பல்வேறு மாநிலங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, காய்ச்சல், இருமல், சளி மற்றும் பிற அறிகுறிகள் தென்பட்டால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் உதயநிதி ஸ்டாலின் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், துணை முதலமைச்சர் உதயநிதி கலந்துகொள்ள இருந்த அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Hardik Pandya: ஹர்திக் பாண்ட்யா நல்ல கேப்டனா? தன்னம்பிக்கை இல்லாத வீரர்? காணாமல் போன ஆல்-ரவுண்டர்





















