மேலும் அறிய

TamilNadu Covid-19 Daily Data Tracker: கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1851 பேருக்கு கொரோனா, 28 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கோவிட்-19 தினசரி பாதிப்பு குறைவாகவே உள்ளது - மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,90,632ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேரும், சென்னையில் 205 பேரும், ஈரோட்டில் 151 பேரும், சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 112  பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 

TamilNadu Covid-19 Daily Data Tracker:  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1851 பேருக்கு கொரோனா, 28 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் சேலம், ஈரோடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் 32 மாவட்டங்களில் கோவிட்-19 தினசரி பாதிப்பு குறைவாகவே உள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னதாக தெரிவத்தார். 

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.

TamilNadu Covid-19 Daily Data Tracker:  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1851 பேருக்கு கொரோனா, 28 பேர் உயிரிழப்பு

குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில்  1,911 (நேற்று 1,842) பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,35,715 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர்.   

இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,547 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8363 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது.  கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது. 

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,458 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

TamilNadu Covid-19 Daily Data Tracker:  கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1851 பேருக்கு கொரோனா, 28 பேர் உயிரிழப்பு

தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.2 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, சேலம், கோயம்பத்தூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் தொற்று உறுதி விகிதம் 2.0க்கும் அதிகமாக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில், அரியலூர் மாவட்டத்தைத் தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தொற்று பரிசோதனை எண்ணிக்கை 1,000க்கும் அதிகமாக உள்ளது.   

0.5 விழுக்காடுக்கும் குறைவாக இருந்த சென்னையின் தொற்று உறுதி விகிதம், தற்போது 0.8 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25,௦௦௦ ஆக உள்ள நிலையில், தொற்று உறுதி விகிதம் 1-க்கும் கீழாக இருப்பது நிம்மதி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 

கொரோனா பரிசோதனை: கடந்த 24 மணிநேரத்தில், 1,54,631 (நேற்று -1,57,587)  கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த  பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 3,99,58,164) கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் அதிகமாக இருந்தால், கொரோனா ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

தொற்று விகிதத்தின் மூலம், சமூக அளவில் sars-cov-2 (கொரோனா வைரஸ்) பரவலின் தற்போதைய நிலை என்ன என்பதையும், நோய்த்தொற்று தாக்கத்திற்கு ஏற்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறதா ? என்பதையும் கணக்கிடமுடியும். எனவே, உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் குறைந்து காணப்படுவதன்  மூலம் சமூக அளவில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறைந்து வருவதை உணர முடிகிறது. இந்த தொற்று உறுதி விகிதம், மூன்றாவது அலையை ஏற்படுத்தாது என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

இரண்டாவது அலை ஓயவில்லை:  நாட்டில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை முற்றிலுமாக குறையவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில், ஒரு சில இடங்களில் மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது என்று கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை இணைச் செயலர் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs SRH LIVE Score: நிதானமாக விளையாடும் ஹைதராபாத்; சொந்த மண்ணில் கெத்து காட்டும் சென்னை!
CSK vs SRH LIVE Score: நிதானமாக விளையாடும் ஹைதராபாத்; சொந்த மண்ணில் கெத்து காட்டும் சென்னை!
CSK vs SRH Innings Highlights: சதத்தை தவறவிட்ட ருதுராஜ்; மிரட்டிவிட்ட மிட்ஷெல், துபே; ஹைதராபாத்துக்கு 213 இலக்கு!
CSK vs SRH Innings Highlights: சதத்தை தவறவிட்ட ருதுராஜ்; மிரட்டிவிட்ட மிட்ஷெல், துபே; ஹைதராபாத்துக்கு 213 இலக்கு!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video | அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்க போராடிய மக்கள் பதர வைக்கும் வீடியோ காட்சிPremalatha vijayakanth | ”STRONG ROOM மட்டும் போதுமா?தேர்தல் ஆணையம் STRONG-ஆ இருக்கனும்” - பிரேமலதாGukesh meets Stalin | தம்பி குகேஷ்.. வா பா.. சாதித்த இளைஞர் நேரில் வாழ்த்திய முதல்வர்Premalatha Vijayakanth |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs SRH LIVE Score: நிதானமாக விளையாடும் ஹைதராபாத்; சொந்த மண்ணில் கெத்து காட்டும் சென்னை!
CSK vs SRH LIVE Score: நிதானமாக விளையாடும் ஹைதராபாத்; சொந்த மண்ணில் கெத்து காட்டும் சென்னை!
CSK vs SRH Innings Highlights: சதத்தை தவறவிட்ட ருதுராஜ்; மிரட்டிவிட்ட மிட்ஷெல், துபே; ஹைதராபாத்துக்கு 213 இலக்கு!
CSK vs SRH Innings Highlights: சதத்தை தவறவிட்ட ருதுராஜ்; மிரட்டிவிட்ட மிட்ஷெல், துபே; ஹைதராபாத்துக்கு 213 இலக்கு!
"தாலி கூட அணிவதில்லை; நேரு இருந்திருந்தால்..." - ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ் சர்ச்சை!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
IPL 2024 Virat Kohli: ஐ.பி.எல் 2024.. 500 ரன்கள் குவித்து கிங் கோலி சாதனை! முழு விவரம் உள்ளே!
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
வெள்ளியங்கிரி மலையில் தொடரும் உயிரிழப்புகள்: மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த பரிதாபம்
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
GT vs RCB Match Highlights: இடியாய் இடித்த வில் ஜேக்ஸ்; சுத்தமாக எடுபடாத குஜராத் பவுலிங்; 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் RCB வெற்றி!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
PCB: ஒரு காலத்தில் இந்தியாவின் உலகக் கோப்பை பயிற்சியாளர்: இன்று பாகிஸ்தானில் புதிய பொறுப்பு!
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Gujarat Drug: குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்; பாகிஸ்தானியர் 14 பேர் கைது
Embed widget