Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் வரும் டிசம்பர் 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவல் வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14-ல் அமலாக்கத்துறையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஓமந்தூரார் மருத்துமனையில் இருந்து காணொளியில் முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
இதுவரை 8- முறைக்கு மேல் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அவரது கைது சட்டப்படியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செந்தில் பாலாஜி வழக்கு
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே செந்தில் பாலாஜிக்கு எதிராக 120 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையுடன், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். அவரது காவல் 8 முறை நீடிக்கப்பட்ட நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஜூன் 16 மற்றும் செப்டம்பர் 20ஆம் தேதிகளில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதோடு, கடந்த மாதம் 19-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி பலமுறை ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிட்டும் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அவர் சிறையில் தான் இருந்து வந்தார். இதனிடையே அவ்வப்போது உடல்நிலை பாதிப்பால் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அந்த வகையில் நவம்பர் 15 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. முதலில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு செந்தில் பாலாஜிக்கு வயிறு, குடல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் நீட்டிப்பு
செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்த பிறகு, ஆக.12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பிறகு. நீதிமன்றக் காவல் கடந்த அக். 20-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவா் புழல் சிறையிலிருந்து காணொலி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். தொடா்ந்து, அவரது நீதிமன்றக் காவலை நவ. 22-வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இன்றுடன் காவல் முடிவடையும் நிலையில், பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டாா்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தலையில் மூளைக்கு செல்லும் நரம்பில் ரத்த கட்டு இருப்பது எம்.ஆர்.ஐ. மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனைகளில் கடந்த வாரம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இதற்கான சிகிச்சைகள் குறித்து நரம்பியல் துறை மருத்துவர்கள் நேற்று காலை பரிசோதனை மேற்கொண்டு, சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.