மேலும் அறிய

Tamilnadu Coronavirus : தமிழகத்தில் ஒரேநாளில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், இன்று ஒரேநாளில் மட்டும் 59 நபர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிவருகிறது. இதனையடுத்து மாநிலம் முழுவதும் இரவுநேர ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் கடந்த இரு தினங்களாக 11 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 12 ஆயிரத்து 652 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 12 ஆயிரத்தை கட்ந்திருப்பது மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamilnadu Coronavirus : தமிழகத்தில் ஒரேநாளில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 ஆயிரத்து 526 நபர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள வீடு திரும்பியுள்ளனர். நேற்று மாநிலம் முழுவதம் 53 நபர்கள் உயிரிழந்த நிலையில், இன்று 59 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழகத்தில் புதிதாக 12 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3 ஆயிரத்து 789 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 8 ஆயிரத்து 863 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Tamilnadu Coronavirus : தமிழகத்தில் ஒரேநாளில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 711-ஆக உயர்ந்துள்ளதுஇன்று மட்டும் தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 7 ஆயிரத்து 583 நபர்களும், பெண்கள் 5 ஆயிரத்து 067 நபர்களும் ஆகும். கொரோனா தொற்று குணமடைந்து இன்று மட்டும் 7 ஆயிரத்து 526 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9 லட்சத்து 34 ஆயிரத்து 966 ஆக உள்ளது. மேலும் கொரோனா சிகிச்சை பலனின்றி இன்று 59 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 317 ஆக அதிகரித்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களில் 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், 20 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்கள். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின்  எண்ணிக்கை 89 ஆயிரத்து 428-ஆக இருக்கிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget