Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
LIVE
Background
கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 15,108 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 39 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று, கடந்த 24 மணி நேரத்தில் 374 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகினர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு 29 ஆயிரத்து 280-ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வாசிக்க: முதல் தடுப்பூசி 70 சதவீதம் பாதுகாப்பு தரும்; வேலூர் கிறிஸ்தவ கல்லூரி ஆய்வில் தகவல்!
தமிழ்நாட்டில் 14 ஆயிரமாக குறைந்தது தினசரி கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 14 ஆயிரத்து 14 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 23வது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.சென்னையில் இன்று கொரோனாவிற்கு 935 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் இன்று மட்டும் 267 நபர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர்.
புதுவையில் இன்று 402 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 8 ஆயிரத்து 724 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 402 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை புதுவையில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 528 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,684 ஆக உயர்ந்துள்ளது.
மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் செவிலியர் உயிரிழப்பு
கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்களும், செவிலியர்களும் என சுகாதாரத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் மகாராணி. அவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு மருத்துவர்களும், உடன் பணிபுரிபவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 தரப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி
கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், கட்டுமானப் பணிகள் போற்கொள்ள ஏற்கனவே, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும். வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 தரப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
இ-சேவை மையங்கள் ஜூன் 14ம் தேதி முதல் இயங்க அனுமதி
கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.