TN Corona LIVE Updates : தமிழ்நாட்டில் நாளை முதல் 24-ஆம் தேதி முழு ஊரடங்கு..
TN Corona Cases LIVE Updates: தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரச தெரிவித்தது. இதில் 3.94% வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
LIVE
Background
Corona Virus Latest News in Tamil: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 23,110 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தற்போது கோவிட்-19 பாதிப்புக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,39,401-ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு இதுவரை 74,03,950 தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரச தெரிவித்தது. இதில் 3.94% வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து மொத்தம், 66,74,970 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 7,28,980 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்திடம் இருப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசோதனை அடிப்படையில் தடுப்பு மருந்துகளை டிரோன் மூலம் விநியோகிப்பதற்காக தெலங்கானா அரசுக்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் ஆகியவை நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கியுள்ளது. ஆளில்லாத விமானம் அமைப்பு விதிகள் 2021-இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆக்சிஜன் உற்பத்தி உயர்த்த கோரிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
வரும் 11-ஆம் தேதி முதல் 35 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் நிறுவனம் துவங்குகிறது. அதனை 70 டன்னாக உயர்த்த அரசு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா விழிப்புணர்வுக்காக எஞ்சாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய சென்னை ரயில்வே போலீஸ்
Watch the enthralling performance by Chennai Railway Police at Chennai Central Railway station as a #COVID19 awareness program..
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) May 9, 2021
Giving tough competition to @TheKeralaPolice..😎😎 pic.twitter.com/AJCXyWWs6J
நாட்டுக்கு மூச்சுக்காற்றுதான் தேவை. பிரதமருக்கு தங்கும் இடம் அல்ல - ராகுல் காந்தி
देश को PM आवास नहीं, सांस चाहिए! pic.twitter.com/jvTkm7diBm
— Rahul Gandhi (@RahulGandhi) May 9, 2021
தயாரானது கொரோனா ”வார் ரூம்”
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதன் அடிப்படையில் தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த கொரோனா கட்டளை மையம் (Unified command centre) தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த கட்டளை மையம் கொரோனா ’வார் ரூம்’ ஆகச் செயல்படும். தாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ். இந்த மையத்தின் வழிகாட்டுதல் இயக்குநராகவும், நந்தகுமார் ஐ.ஏ.எஸ். இதன் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பவர்கள் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
Home Isolation in Mild #COVID19 : Dos and Don’ts
— PIB in Maharashtra 🇮🇳 (@PIBMumbai) May 9, 2021
Helpful especially for health professionals and care-givers and those getting infected and having to undergo home isolation#Unite2FightCorona
📕https://t.co/OOtFUzT77a pic.twitter.com/2kWDuP0xZB
#IndiaFightsCorona வழங்கியிருக்கும் நெறிமுறை.