CM MK Stalin: ’கல்வி, மருத்துவ சேவைக்கே முன்னுரிமை அளிக்கும் அரசு’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி ட்வீட்!
CM MK Stalin: கல்வி மற்றும் மருத்துவ சேவைக்கே திராட மாடல் அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
கல்வி மற்றும் மருத்துவ சேவைக்கே திராட மாடல் அரசு முன்னுரிமை அளிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் பொதுமக்களின் சுகாதார சுமை குறைந்துள்ளதாகவும், இந்தத் திட்டம் மக்களுக்கு மிகவும் பயனாக இருப்பதாகவும் தி இந்து ஆங்கில நாளிதழில் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்தி டிவிட்டரில்.” கல்வி,மருத்துவத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரண்டு துறையிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதோடு, இந்தத் திட்டங்களால் மக்கள் பயன் அடைந்துள்ளதையும் மாநில திட்ட கமிசன் அளித்துள்ள தரவுகளின் மூலம் வெளிபடுகிறது.” என்று மக்களின் நலனை உறுதிசெய்வதை நோக்கமாக கொண்டு பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் பயன்பாடு குறித்து தெரிந்துகொள்வதற்காக தமிழ்நாடு மாநில திட்ட கமிஷன் ஓரு மதிப்பீடு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பு, குறைவான வருமானம் பிரிவினருக்கு ஏற்றதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் செயல்படுத்துவதற்கு முன்பு, மிகக் குறைந்த வருமான கொண்ட குடும்பத்தினர் தங்கள் மாத வருமானத்தில் 10% மருத்துவத்திற்கு செலவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்காக செலவிட்டுள்ளனர். இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, மக்கள் இந்த இரண்டிற்ககாவும் செலவழிப்பது குறைந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலம் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு மருத்துவர்களை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களுக்கு வீடு தேடிச் சென்று சிகிச்சை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 1 கோடியே 51 ஆயிரத்து 661 பயனாளிகளுக்கு முதன்முறை சேவைகளும், 3 கோடியே 4 லட்சத்து 71 ஆயிரத்து 896 நபர்களுக்கு தொடர் சேவைகளும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் உயர் ரத்தம் உள்ளிட்ட மற்ற சேவைகளும் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகின்றன.