கொரோனாவில் இருந்து மீண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... நாளை டிஸ்சார்ஜ்!
கொரோனால் தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புகிறார்.
கொரோனால் தொற்றால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புகிறார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், கொரோனால் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முழுவதும் குணமடைந்து விட்டதாக காவேரி மருத்துவமனை அறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், “ கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அவர் நாளை தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை முடித்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் ஒரு வாரம் வீட்டில் முழு ஓய்வில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.
#JUSTIN | கொரோனாவில் இருந்து மீண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்... https://t.co/wupaoCQKa2 | #COVID19 #MKStalin #coronavirus pic.twitter.com/RCShiKqQCU
— ABP Nadu (@abpnadu) July 17, 2022
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனிடையே தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூலை 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார்.
இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் #COVID19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.
— M.K.Stalin (@mkstalin) July 12, 2022
அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )