மேலும் அறிய
TN Assembly Session: கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு .. அ.தி.மு.க. வெளிநடப்பு
கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த அ.தி.மு.க. உறுப்பினர்கள்
2022ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடர் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. ஒமிக்ரான், கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக இன்றுடன் முடிவடையும் சட்டசபை கூட்டத்தொடரில், இன்று கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதவை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேரவையில் தாக்கல் செய்தார். ஆனால், கூட்டுறவு நிர்வாகிகளின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைத்துள்ள இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















