TN Agri Budget 2021 Live Updates: நெல்லுக்கு... கரும்புக்கு விலை...பலா, மிளகு, பொன்னிக்கு புவிசார்... நிறைவு பெற்ற பட்ஜெட்!
TN Agri Budget 2021 Live: வேளாண் பட்ஜெட் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகளை இந்த பிளாக் பகுதியில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Background
தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.
பண்ருட்டி பலா, கொல்லி மலை மிளகு, பொன்னி அரிசிக்கு புவிசார் குறியீடு!
பொன்னி அரிசி, கொல்லி மலை மிளகு, பண்ரூட்டி பலாவுக்கு புவிசார் குறியீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக மாநில அரசு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் செலவிடப்படும்.
முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்டத்திட்டம்
குழந்தைகள் தாவரங்களைப் பற்றி அடைந்து கொள்வதற்கு ஊரகப் பகுதிகளில் 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய இரண்டு லட்சம் விதைகள் மானியத்தில் வழங்கப்படும்





















