“கவுன்சிலராக கூட ஜெயிக்கல; காசு கொடுத்து அண்ணாமலை செய்யும் காரியம்” - பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!
நான் பாஜகவில் இருந்து வந்துவிட்டேன். நான் பாஜகவில் இல்லை.
பாஜகவுக்குதான் என் ஓட்டு தேவை எனவும் எனக்கு பாஜக ஓட்டு தேவையில்லை எனவும் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் எம்.எல்.ஏவும் நடிகருமான எஸ்.வி.சேகர், “அண்ணாமலை என்ற பெயரை கேட்டாலே காதுல விழ மாட்டேங்குது. நான் பாஜகவில் இருந்து வந்துவிட்டேன். நான் பாஜகவில் இல்லை. ஏனென்றால் அண்ணாமலை போன்றவர்கள் இருக்கும் வரைக்கும் அரசியல் தரம் கெட்டுதான் இருக்கும். அப்படிபட்ட அரசியலில் இருக்க நான் விருப்பப்படவில்லை. மோடி அழைத்தார் என்று பாஜகவில் சேர்ந்தேன்.
என்னை கட்சியில் இருந்து தூக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து பார்த்தார். உன்னால் முடிந்ததை பார்த்துக்கு என்று சொன்னேன். அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களிடம் சென்று பார்த்தார். ஆனால் அவரால் முடியவில்லை. இப்போது உறுப்பினர் சேர்க்கை அட்டையின் காலத்தவணை முடிந்துவிட்டது. அதனால் அண்ணாமலை போன்ற மோசமான தலைவர்கள் இருக்கக்கூடிய கட்சியில் இருப்பது அசிங்கம் என நினைத்து எனது உறுப்பினர் அட்டையை புதுபிக்கவில்லை. எனக்கு இனிமேல் அரசியல் தேவையில்லை. நான் எல்லாருக்கும் நல்ல நண்பனாக, குடிமகனாக தமிழகனாக திராவிடனாக இருந்துவிட்டு போகிறேன்.
நான் ஏன் எப்போதும் ஜாதி கலரையும் மதக் கலரையும் பூசிக்க வேண்டும். எனக்கு அவசியம் இல்லை. என் ஓட்டுதான் பாஜகவுக்கு வேண்டும். பாஜக ஓட்டு எனக்கு வேண்டாம். நான் ஒருமுறை எம்.எல்.ஏவாக இருந்துட்டேன். 5 வருடம் எம்.எல்.ஏவாக இருந்துட்டேன். அதுல ஒரு பைசா கூட கமிஷன் வாங்காம இருந்து நிரூபித்துவிட்டேன். போதும் எனக்கு. அண்ணாமலை கவுன்சிலர் கூட ஜெயிக்காத ஆளு. அதைப்பற்றி எனக்கு என்ன? அண்ணாமலைதான் என்னை கூப்பிட வேண்டும்.
நான் ஏன் அண்ணாமலையை கூப்பிட வேண்டும். நான் அப்படியே கூப்பிட வேண்டும் என்றால் திருவண்ணாமலை போய் அருணாச்சலேஸ்வரரை கும்பிட்டு வருவேன். இந்த அண்ணாமலையெல்லாம் ஒன்றும் இல்லை. அவரே காசு கொடுத்து அவர் பெயரை பரப்பிக்கொண்டு இருக்கிறார். ஒரு பிரயோஜனமும் கிடையாது. இப்பவே பாஜக பாதி போய்விட்டது. 2026ல் மீதியும் போய்டும்” எனத் தெரிவித்தார்.