மேலும் அறிய

அறிவுரை சொல்லியே அனுப்பினோம்; அடிக்கவில்லை - மாணவர் மரணம் குறித்து எஸ்.பி விளக்கம்

’’விசாரணைக்கு அழைத்து வந்த மாணவன் மணிகண்டனை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றதற்கான கடிதத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்’’

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவர். நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த மணிகண்டன், தனது டூவீலரை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

அறிவுரை சொல்லியே அனுப்பினோம்; அடிக்கவில்லை - மாணவர் மரணம் குறித்து எஸ்.பி விளக்கம்

அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து காவல்நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, மணிகண்டன் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

டிஎஸ்பி உத்தரவின்பேரில், முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால்தான், மணிகண்டன் இறந்துள்ளார் என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகிறது. 

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்

உயிரிழந்த மாணவர் மணிகண்டனின் உடல் இன்று மாலை உடற்கூறு ஆய்வு செய்யப்படும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். அதில் மாணவர் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என்று சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை; அவருக்கு அறிவுரை சொல்லியே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர் என அவர் விளக்கம் அளித்துள்ளதுடன், விசாரணைக்கு அழைத்து வந்த மாணவன் மணிகண்டனை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

அறிவுரை சொல்லியே அனுப்பினோம்; அடிக்கவில்லை - மாணவர் மரணம் குறித்து எஸ்.பி விளக்கம்
அதில் நான் நீர் கோழியேந்தல் கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். நான் விவசாய வேலை செய்து பிழைத்து வருகிறேன். இன்று (04-12-21) ஆம் தேதி கீழ்த்தூவல் காஃப்வல் நிலையத்தில் எனது மகன் மணிகண்டன் விசாரணைக்காக இருந்தவரை இன்று இரவு நேரம் என்பதால் நாளை காலை 10 மணிக்கு தாங்கள் முன் தவறாமல் ஆஜர் படுத்துகிறேன். எனது மகன் மணிகண்டன் இன்று (04-12--21)ஆம் தேதி 20.00 மணிக்கு நானும் எனது உறவுக்காரர் குமரையா மகன் இராமலிங்கம் ஆகிய இருவரும் நல்ல நிலையில் அழைத்து செல்கிறோம் என அதில் எழுத்தப்பட்டு அதில் மணிகண்டனின் தந்தை ராமலட்சுமணனின் கையெப்பமும் இடம் பெற்றுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
போட்டுப்பார்த்த வன்னியரசு! திருமா சொன்ன கறார் பதில்! என்ன நடக்கிறது விசிகவில்?
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Watch video : அந்த மனசு இருக்கே! சிறுமியிடம் உரையாடிய பண்ட்.. வைரலாகும் வீடியோ
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
Breaking News LIVE: விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு
"மோடி அரசிடம் பணிந்த தேர்தல் ஆணையம்" கொதித்தெழுந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Sabarimala: சபரிமலைக்கு செல்பவர்கள் இந்த தவறை செய்யாதீர்கள்.. அபராதம் விதிக்கும் அதிகாரிகள்..!
சபரிமலைக்கு செல்பவர்கள் இந்த தவறை செய்யாதீர்கள்.. அபராதம் விதிக்கும் அதிகாரிகள்..!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
TRB Raja:
"சேலத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி காத்திருக்கிறது" - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கொடுத்த சூப்பர் அப்டேட்
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம்  - உச்சநீதிமன்றம் அதிரடி
NEET Counselling: அப்படி போடு..! மருத்துவ இடங்கள், சிறப்பு நீட் கவுன்சிலிங், இன்று முதல் தேர்வு செய்யலாம் - உச்சநீதிமன்றம் அதிரடி
Embed widget