மேலும் அறிய

Chennai Rain: திடீரென சென்னைக்கு சர்ஃப்ரைஸ் கொடுத்த மழை...! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

சென்னையில் ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் திடீரென மழை பெய்து வருகிறது.

சென்னையில் நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ராயப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், ஏர்போர்ட், குரோம்பேட்டை, தாம்பரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்து வருகிறது. 

இன்றைய வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்று மாலை தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று (06.06.2023) காலை 05:30  மணி அளவில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நிலவுகிறது. இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் மத்திய  கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். 

 தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 

06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 

08.06.2023 முதல் 10.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

அரபிக்கடல் பகுதிகள்:

06.06.2023: கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள், இலட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35  முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45  முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். பின் காற்றின் வேகம் உயர்ந்து  இரவு முதல்  மத்திய கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

07.06.2023: வடக்கு கேரள– கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மத்திய கிழக்கு  மற்றும்  அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்   சூறாவளிக்காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதன் பிறகு காற்றின் வேகம் உயர்ந்து மணிக்கு 80  முதல் 90  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

06.06.2023 மற்றும் 07.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அந்தமான் கடல் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

08.06.2023 மற்றும் 09.06.2023: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள்,  வடக்கு அந்தமான் கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!Erode Bypoll : ஈரோடு இடைத்தேர்தல்! முட்டிமோதும் திமுக, காங்கிரஸ்! குளிர்காயும் அதிமுக”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..
Embed widget