மேலும் அறிய

CM Stalin: இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

CM Stalin: அடுத்த இரண்டு ஆண்டுகள் மிக முக்கியமானது என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Stalin: மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம்:

சென்னையில் உள்ள தலைமையில் தலைமைச் செயலகத்தில் 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) ஆகியோருடன், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “ 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நாம் செயல்படுத்தியுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் சென்று சேர்ந்து, திட்டங்களின் பயன்கள் தேவையானவர்களுக்குச் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இதனை மக்களுடன் உரையாடிய எனது நேரடி அனுபவங்களில் இருந்தே சொல்கிறேன்.

ஆட்சியர்களுக்கு பாராட்டுகள்..!

நமது அரசு கொண்டு வரும் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய்ச் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இருக்கிறது. இதனை கண்காணித்த மாவட்ட ஆட்சியர்களான உங்களுக்கு என்னுடைய நன்றி! அடுத்து வரப்போகும் நாட்களிலும் இன்னும்பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். புதுமைப்பெண் திட்டம் போல,  மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ்ப்புதல்வன்' திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதுபோன்ற திட்டம் தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் திட்டங்கள்! இதுபோன்ற திட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் மிக முக்கியமான ஆண்டுகள்! புதிய உத்வேகத்துடன் மக்கள் நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஒரு சிறந்த நல்லாட்சியை வழங்க

  • சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு
  • சிறந்த சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்
  • கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
  • பொதுமக்களுக்குத் தங்குதடையின்றி எளிதாக அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல்

ஆகிய நான்கு குறிக்கோள்களில் நாம் கவனம் செலுத்த வேண்டியது மிக மிக அவசியம்! இவைதான் நல்லாட்சியின் இலக்கணங்கள்! அத்தகைய நல்லாட்சியைதான் நாம் வழங்கி வருகிறோம் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். புதிய புதிய தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இது நமது அரசு என்று மக்களை நினைக்க வைத்துள்ளோம். இவை அனைத்தும் தொய்வில்லாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர வேண்டும். அதற்கு அடிப்படையாக நீங்கள் முழுக்கவனம் செலுத்த வேண்டியவற்றை எடுத்து சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு.

புதிய திட்டங்கள்:

  • "மக்களுடன் முதலமைச்சர்" திட்டத்தினை வரும் ஜூலை திங்கள் 15-ஆம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 15-ஆம் நாள் வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" மற்றும் "நீங்கள் நலமா?" போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளது.
  • வருவாய்த் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
  • “கலைஞர் கனவு இல்லம்" திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் நீங்கள் தனிக்கவனம் செலுத்தி பணிகளை துரிதமாக முடிக்க வேண்டுமென்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.
  • அனைத்துப் பள்ளிக் குழந்தைகளும் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வகையில் "கல்லூரிக் கனவு" "உயர்வுக்குப் படி" போன்ற திட்டங்களை நீங்கள் ஆர்வத்துடனும், முனைப்புடனும் செயல்படுத்த வேண்டும்.
  • அதேபோல், விரைவில் தொடங்கப்படவிருக்கும் "தமிழ்ப்புதல்வன்" திட்டமும் மிகவும் முக்கியமான திட்டமாகும். இதுபற்றி முதலிலேயே சொல்லி இருக்கிறேன்.
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தையும் நீங்கள் கவனமாக கண்காணிக்க வேண்டும்.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - ஸ்டாலின்

2024-25-ஆம் ஆண்டில் தங்கள் மாவட்டங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளை விரைவில் காலம் தாழ்த்தாமல் முடிக்க வேண்டுமென்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இயற்கை இடர்ப்பாடுகளின் காரணமாக பணிகள் தாமதப்படக்கூடும். இதனை கருத்தில் கொண்டு கிடைத்துள்ள குறுகிய காலத்திற்குள் சரியாக திட்டமிட்டு மாவட்டங்களில் திட்டப் பணிகளை நல்ல தரத்துடன் விரைவாக முடிக்க வேண்டுமென்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் - ஸ்டாலின்:

இன்னொரு மிக முக்கியமான ஒரு கடமையும் உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் நாம் கட்டுப்படுத்தி இருக்கிறோம். ஆனால் அது போதாது. போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் ஒழுங்குப் பிரச்னை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்னை! எனவே தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம்.

மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள், மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் நகராட்சித் துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை உங்கள் மாவட்டத்தில் முற்றிலுமாக ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் தீவிரக் கவனம் செலுத்தியாக வேண்டும். "போதை பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை. முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம்" என்ற நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly Session LIVE: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம் - இரங்கல் தீர்மானம் வாசிப்பு
TN Assembly Session LIVE: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம் - இரங்கல் தீர்மானம் வாசிப்பு
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Tamilisai Vs Annamalai : அ.மலையை வச்சிகிட்டே சம்பவம் செய்த தமிழிசை! Meeting-ல் நடந்தது என்ன?Cellphone Theft : ’’அண்ணே..1 சிக்கன் ரைஸ்’’செல்போனை திருடிய வாலிபர்..பரபரப்பு சிசிடிவி காட்சிகள்Kallakurichi issue : அடுத்தடுத்து உயிரிழப்பு! மாவட்ட ஆட்சியர் மாற்றம்! கள்ளக்குறிச்சி விவகாரம்Dharmapuri collector  : ”என்ன பண்ணிட்டு இருக்கீங்க” LEFT&RIGHT வாங்கிய கலெக்டர்! ஷாக்கான POLICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Session LIVE: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம் - இரங்கல் தீர்மானம் வாசிப்பு
TN Assembly Session LIVE: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம் - இரங்கல் தீர்மானம் வாசிப்பு
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
திமுக அரசின் அலட்சியம்; கள்ளச்சாராயத்தின் கடந்தகால நிகழ்வுகளை சுட்டிக்காட்டி பொங்கி எழுந்த விஜய்!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Kallakurichi Hooch Tragedy : ”கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலி” மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு பறந்த ஆர்டர்..!
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Illicit Liquor: தமிழ்நாடே பதற்றம் - கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு
Breaking News LIVE: திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 24 பேர் கைது
Breaking News LIVE: திருவாரூர் மாவட்டத்தில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த 24 பேர் கைது
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
ENG Vs WI, T20 Worldcup: மேற்கிந்திய தீவுகளை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து - சூப்பர் 8 சுற்றில் அபார வெற்றி
Kallakurichi Illicit Liquor: சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
சட்டப்பேரவையை புறக்கணிக்கும் எடப்பாடி! கள்ளக்குறிச்சி துயரில் பங்கேற்க பயணம்!
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம், 2030 காலிப்பணியிடங்கள்..!
TNPSC Group 2 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம், 2030 காலிப்பணியிடங்கள்..!
Embed widget