மேலும் அறிய

‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

கொரோனாவை தொடர்பு படுத்தி வைக்கப்பட்ட திருமண பேனர் சமூக வலைதளங்களிலும் வைரலாய் பரவி வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையானது வேகமெடுத்த நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சுப காரியங்கள், திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் கட்டுப்பாடுகளுடன் நடத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள  கனியாமூர் என்னும் பகுதியில் திருமணத்திற்காக பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், இன்ஜினியருக்கு கொரோனா தொற்று உறுதி என வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மணமகன் போராட வேண்டியது கொரோனாவுடன் இல்லை; அவரது மனைவியுடன் என மணமகனை கேலி செய்யும் வகையில் நையாண்டியாக எழுதப்பட்டுள்ளது. இவைகளுக்கெல்லாம் ஹைலைட் என்ன வென்றால், மணமகனின் நண்பர்கள், தங்களது புகைப்படத்துடன் தங்களுக்கான புது அடைமொழியையும் வைத்துள்ளனர். அடைமொழி டைட்டில் அனைத்தும்  கொரோனாவுடன் தொடர்புடையதாக இருக்கிறது.


‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற நண்பனின்‌ திருமணத்திற்கு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ முயற்சியாக, நடிகர்‌ வடிவேலுவின்‌ பாணியில்‌ வித்தியாசமான அடைமொழியுடன்‌ தங்கள்‌ பெயர்களை குறிப்பிட்டு திருமண வாழ்த்து பேனர்‌ வைத்து பார்வையாளர்களை கவர்ந்துள்ளனர்‌ கள்ளக்குறிச்சி இளைஞர்கள்‌. கைப்புள்ள, தீப்பொறி திருமுகம்‌,பேக்கரி வீரபாகு,ஏட்டு ஏகாம்பரம்‌ போல வித்தியாசமான பெயர்களில்‌ மக்கள்‌ மனதில்‌ கொரோனா குறித்த விழிப்புணர்வு நிலைத்திருக்க வேண்டும்‌ என்பதற்காக வித்தியாசமாக அச்சிடப்பட்ட திருமண பேனர்‌ ஒன்று பார்வையாளர்களை வெகுவாகக்‌ கவர்ந்துள்ளது.


‛நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌’ கலகல திருமண பேனர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம்‌ சின்னசேலம்‌ அருகே உள்ள கனியாமூரைச்‌ சேர்ந்த பொறியாளர்‌ ராஜ்குமார்‌ திருமணத்திற்கு வாழ்த்துத்‌ தெரிவிக்கும்‌ விதமாக ராஜ்குமாரின்‌ நண்பர்கள்‌ வைத்த டிஜிட்டல்‌ பேனர்‌ தான்‌ கொரோனா விழிப்புணர்வு பேனராக இணையத்தில் வைரலாகி வருகின்றது. மணமகனைத் கொரோனா ‌ தொற்றாளர்‌ எனவும்‌, மணமகளைத்‌ தொற்றிக்‌ கொண்டவர்‌ எனவும்‌, அவர்களுக்கு நடக்கின்ற திருமணத்தை கோவிட்‌ 19 எனவும்‌ ,குறிப்பிட்டுள்ள கள்ளக்குறிச்சி கொலைவெறி பாய்ஸ்‌, இனி போராட வேண்டியது கொரோனாவுடன்‌ அல்ல மனைவியுடன்‌ என்று கிண்டல்‌ செய்துள்ளனர்‌. அதையெல்லாம்‌ விட அந்த பேனர்‌ அடிக்க காசு போட்ட நண்பர்களின் பெயர்கள்‌ அனைத்தும்‌ அடைமொழியோடு இடம்‌ பெற்றுள்ளன. நிலவேம்பு சிவா, ரத்தக்கொதிப்பு ரமேஷ்‌, கோவிட்‌ குமார்‌, பாசிட்டிவ்‌ பிரகாஷ்‌, வைரஸ்‌ வசந்த்‌, சுடூதண்ணி சுப்பிரமணி, காய்ச்சல்‌ கருப்பன்‌, தும்மல்‌ சேகர்‌, ஆம்புலன்ஸ்‌ ஆதி, கோவாக்ஸின்‌ சூர்யா, சானிடைசர்‌ ஸ்ரீராம்‌...என அந்த பட்டியல்‌ நீள்கிறது. இவர்களது கொரோனா கால அடைமொழியால்‌ திருமண பேனர்‌, கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகக்‌ கூறி சிலர்‌ வியப்புடன்‌ பார்த்துச்‌ சென்றாலும்‌ சமூக வலைதளங்களில்‌ இவர்களின்‌ பேனர்‌ வைரலாகி, இந்த 'கொலைவெறி பாய்ஸ்' வைத்துள்ள திருமண பேனர் தற்போது இணையத்தில் வைரலாகி நகைச்சுவையைாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
தமிழகத்தில் இன்று எத்தனை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்? சென்னை? - வானிலை வார்னிங்
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீவிரம்: துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
மேகமலையில் ஆக்கிரமிப்பு அகற்றம் தீவிரம்: துணை ராணுவத்தை அனுப்ப நேரிடும் – உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget