மேலும் அறிய

முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்களில் செய்தது என்ன? ஒரு பக்கா ரிப்போர்ட்!

ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் 30 நாட்கள் நிறைவடையில் நிலையில், இந்த ஒரு மாதத்தில் முதல்வராக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுகள், அறிவிப்புகள், கடிதங்கள், அறிக்கைகளின் காலத் தொகுப்பு

பத்தாண்டுகளுக்கு பிறகு 2021 தேர்தலில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஒருமாதத்தை நிறைவு செய்கிறது. கடந்த 30 நாட்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட புதிய திட்டங்கள், பிறப்பித்த உத்தரவுகள், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு எழுதிய கடிதங்கள், அறிவித்த புதிய திட்டங்கள், அறிக்கைகள் ஆகியவை தேதி வாரியாக தொகுக்கப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களில் 23 புதிய அறிவிப்புகளையும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு 6 கடிதங்களையும், 5 சுற்றுப்பயணங்களையும், அதிகாரிகளுடன் 8 ஆலோசனை கூட்டங்களையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி உள்ளார். 29 புதிய திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சிகள் உடன் 3 சந்திப்பு கூட்டங்களையும் தனது அமைச்சர்கள் உடன் ஒரு அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி முடித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் 30 நாட்களில் செய்தது என்ன? ஒரு பக்கா ரிப்போர்ட்!

மே -7

மே 7ஆம் தேதி கிண்டி ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்

2 கோடியே 7 லட்சத்து 67ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 4153.39 கோடி செலவில் ரூபாய் 2000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டம்

ஆவின் பால்விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைப்பு

நகரங்களில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண சலுகை

மக்கள் மனுக்களை பெற்று 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கான புதிய துறையை உருவாக்குவதற்கான ஒப்புதல்

தனியார் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள வசதியாக சிகிச்சை கட்டணத்தை அரசே காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஏற்பதற்கான திட்டம்

தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்.,யை  நியமித்து உத்தரவு

மே-8

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் மே-10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்துதல்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க கோரி பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக வேண்டுகோள்

நூறுநாளில் மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ்.நியமனம்

மே-9

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் முதல், அமைச்சரவைக்கூட்டம்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம்

சென்னை மாநகராட்சி ஆணையராக ககந்தீப் சிங்பேடி நியமனம்

மே-10 அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணத் தொகையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டம் தொடக்கம்

நாளொன்றுக்கு தமிழகத்திற்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் குப்பிகள் ரெம்டெசிவர் மருந்தை ஒதுக்கீடு செய்யுமாறு இரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தொலைபேசி வாயிலாக கோரிக்கை

அண்ணா பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி மாதம் நடந்த தேர்வுக்கு பதிலாக மீண்டும் தேர்வை நடத்த உத்தரவு

மே-11

கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடை தர முதலமைச்சர் வேண்டுகோள்

ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான சித்தா மையம் திறப்பு

குறு சிறு நடுத்தர நிறுவனங்கள் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் கடன் பெறுவதற்கான முத்திரைத் தாள் பதிவு கட்டணம் 3-12-21 வரை விலக்கு

மே-12

கொரோனா இரண்டாம் அலையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 30 ஆயிரம் செவிலியர், பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம், பிற ஊழியர்களுக்கு 15 ஆயிரம் ஊக்கத் தொகை

தமிழகத்தில் தடுப்பூசி இறக்குமதி செய்வதற்காக உலகளவிய ஒப்பந்தபுள்ளி கோரல்

குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஆட்டோ, கால்டாக்சி வாகனம் வைத்திருப்போர் EMI  செலுத்த கால அவகாசம் நீடிக்க கோரி பிரதமர் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கடிதம்

மே-13

கொரோனா தடுப்பூசி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு கேட்டு பிரதமருக்கு கடிதம்

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை

மே-14

தன்னை சந்திக்க வருபவர்களுக்கு பூங்கொத்து வேண்டாம் புத்தகம் போதும் என அறிக்கை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் தனது இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

24ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ள ஊரடங்கிற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு

தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள WAR ROOM-இல் நள்ளிரவில் ஆய்வு

மே-15

தமிழகத்தில் ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

மே-16

தனியார் மருத்துவமனைகளிலேயே சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் வழங்க உத்தரவு

கொரோனா தொற்றை கட்டுப்பட்டுத்த முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களை கொண்ட குழு அமைப்பு- அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர் குழுவில் சேர்ப்பு

மே-17

கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் முதலமைச்சர் ஆய்வு

மே-18

மறைந்த எழுத்தாளர் கி.ராஜநாராணனுக்கு அரசு மரியாதை, கோவில்பட்டியில் அவருக்கு சிலை அமைக்க உத்தரவு

தமிழகத்திலேயே தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர், உயிர்க்காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய சிட்கோ நிறுவனம் மூலம் கூட்டாண்மை ஏற்படுத்தி நிறுவனங்கள் தயாரிக்க உத்தரவு

2 லட்சத்து 14 ஆயிரத்து 950 புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகை 2000 வழங்க உத்தரவு

முதலமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு வந்த ரூபாய் 69 கோடியில் ரெம்டெசிவர், ஆக்சிஜன் சிலிண்டர்களை கொள்முதல் செய்ய உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஆலோசனை

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனுதாரர்களின் குறைகளை தீர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கிவைப்பு

மே-19

தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளும் ரெம்டெசிவர் பெறுவதற்கு முன்பதிவு செய்ய tnmsc.tn.gov.in-இணையதளம் தொடக்கம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலுள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி உத்தரவு

மே-20

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்களில் நேரில் ஆய்வு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்யக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம்- திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேரில் வழங்கினார்

மே-21

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மதுரை, திருச்சி மாவட்டங்களில் ஸ்டாலின் ஆய்வு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் 17 பேர் குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ற அரசுப்பணி ஆணைகள் வழங்கல்

மே-24

மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கை நீட்டித்து முதல்வர் உத்தரவு

மே-25

ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழம், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தடையின்றி முதலமைச்சர் உத்தரவு-வண்டிகள் மூலம் தெருக்களுக்கு சென்று விநியோகிக்க ஆணை

செங்கல்பட்டு மாவட்டத்தில் 700 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத தடுப்பூசி தயாரிப்பு மையமான HLL ஆலையில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

கத்தார் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 20 பேர் உட்பட 24 பேரை தூதரகம் மூலமாக மீட்க கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

மே 26

விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண்சட்டங்களை திரும்ப பெறக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

திரும்பெரும்புதூரில் உள்ள INOX AIR PRODUCT- திரவ ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலையில் நேரில் ஆய்வு

முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர்களுக்கு 5000 சிறப்பு ஊக்கத்தொகை, கொரோனாவால் இறக்கும்   பத்திரிக்கையாளர்களுக்கு 10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் புலனாய்வுத்துறை வசம் உள்ள வழக்குகளை தவிர்த்து 38 வழக்குகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற உத்தரவு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1400 ஆக்சிஜன் சிலிண்டர் உருளைகளை 18 மாவட்டங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பும் திட்டம் தொடக்கம்

திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க குழு அமைத்து, ஆன்லைன் வகுப்புகளை பதிவு செய்யவும், தவறாக நடந்து கொள்ளும் நபர்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவு

மே-27

செங்கல்பட்டில் உள்ள HLL தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தை குத்தகைக்கு கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம்

மே-28

தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு

கொரொனா தடுப்பு திட்டத்திற்காக முதல்வரின் பொதுநிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு

மே-29

கொரோனா தொற்றால் இரண்டு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கில் 5 லட்சம் செலுத்தவும், 18 வயது வரை தலா 3000 நிவாரண உதவித் தொகையாக வழங்கவும் உத்தரவு

யாஸ் புயலால் குமரி மாவட்டத்தில் நெற்பயிர் பாதிக்கப்பட்டதற்கு ஹக்டேருக்கு ரூபாய் 2000 நிவாரணமும் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா 5000 நிவாரணமும் வழங்க உத்தரவு

மே-30

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் இரண்டாவது முறையாக ஆய்வு

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் PPE  உடை அணிந்து முதலமைச்சர் ஆய்வு

ஜூன் – 2

போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற 2,457 பேருக்கு 497.32 கோடி நிவாரணத் தொகையை விடுவித்து முதல்வர் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள HLL தடுப்பூசி மையத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனுக்கு கடிதம்

டவ் தே புயலில் காணாமல்போன நாகை, மயிலாடுதுறை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 21 பேரின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் வழங்க உத்தரவு

ஜூன் 3

தென் சென்னையில் 250 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை

மதுரையில் 2 லட்சம் சதுரடியில் 70 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவு நூலகம்

நகரப்பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் பயணிக்க அனுமதி

கனவு இல்லம் திட்டத்தின்படி ஞானபீடம், சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளர்களுக்கு இலவச வீடுகள்

திருவாரூரில் 30 கோடியில் நெல்சேமிப்பு கிடங்குகள்

ஆண்டுதோறும் 3 எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதுகள்

இரண்டாம் நிலை காவலர்களுக்கு 5000 ஊக்கத்தொகை

தமிழகத்திலேயே தடுப்பூசிகளை உற்பத்தி செய்வது குறித்து பாரத் பயோடெக் நிறுவன உயரதிகாரிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழ்நாட்டிற்கு போதிய அளவில் ஒதுக்கீடு செய்யக்கோரி ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம்

ஜூன் 5

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ஆம் தேதிவரை நீட்டித்து முதல்வர் உத்தரவு

மாணவர்கள் நலன் கருதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு ரத்து- நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பிரதமருக்கு வேண்டுகோள்

 மதுரையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாக தொடர்பாக கோரி பிரதமருக்கு கடிதம்

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்ட 11 பேர் கொண்ட புதிய குழு அறிவிப்பு

எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய ஒன்றிய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாகிட தி.மு.கழக அரசு உறுதியுடன் பாடுபடும்” என அறிக்கை.

கொரோனா தொற்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் நீலா என்ற சிங்கம் உயிரிழந்த நிலையில் உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு.

 

இது தான் தனது தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் ‛டே பை டே’ ஸ்டாலின் மேற்கொண்டு நடவடிக்கைகள், உத்தரவுகள், செயல்படுத்திய திட்டங்களின் முழு விபரம். வருங்காலங்களில் இது தொடரும் என எதிர்பார்க்கலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget