மேலும் அறிய

ஒரு வாரத்தில் 40 பேர் கைது... வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு ; கொந்தளிக்கும் அன்புமணி

இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2024-ஆம் ஆண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில்  இராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது செய்துள்ளது. இதற்க்கு நிரந்தரத் தீர்வு எப்போது? என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுபியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்...,

வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் விசைப்படகுகளுடன் இலங்கைக் கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.  தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில்  மீன் பிடிக்கும் போது அவர்களை சிங்களக் கடற்படை அத்துமீறி கைது செய்வது கண்டிக்கத்தக்கது; அதை எந்த வகையிலும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

கடந்த ஒரு  வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. கடந்த 2-ஆம் தேதி 18 மீனவர்களும், 4-ஆம் தேதி 14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8  மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்.

2024-ஆம் ஆண்டில் மட்டும்  தமிழக மீனவர்கள் 569 பேரை சிங்களக் கடற்படை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 73 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை திருப்பி வழங்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை நிறைவேற்ற இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதுமட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் 96 மீனவர்களுக்கு 6 மாதங்கள் முதல் இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டும், அபராதம் விதிக்கப்பட்டும்  சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதை நாடாளுமன்ற மாநிலங்களவையில் நான் எழுப்பிய வினாவுக்கு அளித்த பதிலிலும் மத்திய அரசு உறுதி செய்திருக்கிறது. ஆனாலும், அவர்களை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இலங்கைக் கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உள்ளிட்ட அங்குள்ள சிறைகளில் வாடும் அனைத்து மீனவர்களையும் உடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத்  தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
விசிகவில் இருந்து தூக்கி எறியப்படும் ஆதவ் அர்ஜுனா? சாட்டையை சுழற்றும் திருமா!
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
என் கூட குடும்பம் நடத்த முடியாது; ஆனால் ரோகித் நடத்துவார்: எப்படின்னு விவரிக்கும் அன்னபூரணி அரசு அம்மா
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை: கஸ்தூரி வைக்கும் ஒரே ஒரு கோரிக்கை! 
"பக்திமானா இருப்பார் போல" பெட்ரோல் பங்கில் சாமியை கும்பிட்டுவிட்டு ஆட்டைய போட்ட திருடர்!
"அவங்களுக்கு தகுதி இருக்கு" மம்தா தலைமையில் இந்தியா கூட்டணி? பயங்கர வியூகமா இருக்கே!
Vijay - Seeman:
Vijay - Seeman: "திருமாதான் வேண்டும்" சீமானை கண்டுகொள்ளாத விஜய்! அப்செட்டில் அண்ணன்!
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
வேகமாக சென்ற கார் மரத்தில் மோதி விபத்து - 4 பேர் பலி
Embed widget