மேலும் அறிய

Special Train: திருப்பூர், சேலம், மங்களூருக்கு சிறப்பு ரயில்.! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு- முன்பதிவு எப்போது.?

Special Train: விஷு பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து திருவனந்தபுரம், போத்தனூர், ஈரோடு, மங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்கப்படவுள்ளது.

தொடர் விடுமுறை- சிறப்பு ரயில்

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டும், கேரளாவில் விஷு திருவிழாவும் கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து தொடர் விடுமுறை கிடைக்கவுள்ளதால் பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்ட நிலையில் அனைத்து ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சிறப்பு ரயில்கள் விடப்படுமா.? என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த வகையில் நெல்லை, கோவை, தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மங்களூர், திருவனந்தபுரம், மங்களூர் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், விஷு திருவிழா காரணமாக அதிகமான பயணிகள் நெரிசலை சமாளிக்க பல சிறப்பு ரயில்களை இயக்குவதாக தெரிவித்துள்ளது. 

சிறப்பு ரயில் அறிவிப்புகள்

சென்னை – மங்களூரு சிறப்பு ரயில் (06127 / 06128)

06127: சென்னை சென்ட்ரலில் இருந்து ஏப்ரல் 8 இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4.00 மணிக்கு மங்களூரு சென்றடையும்.
06128: மங்களூருவில் இருந்து ஏப்ரல் 9 இரவு 8.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

சென்னை எழும்பூர் – மங்களூரு சிறப்பு ரயில் (06153)

ஏப்ரல் 10 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.55 மணிக்கு மங்களூரு சென்று சேரும்.

 மங்களூரு – திருவனந்தபுரம் (06041 / 06042)

06041: ஏப்ரல் 11 மாலை 6.00 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
06042: ஏப்ரல் 12 காலை 8.30 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 8.45 மணிக்கு மங்களூரு வந்தடையும்.

மங்களூரு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06154)

ஏப்ரல் 15 மாலை 4.00 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். அனைத்து ரயில்களிலும் ஏசி, ஸ்லீப்பர் மற்றும் சாதாரண வகுப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு எப்போது.?

சென்னை எழும்பூர் – மங்களூரு (06153) சிறப்பு ரயில்  ஏப்ரல் 8 அன்று தொடங்கப்பட்டுள்ளது. மற்ற ரயில்களுக்கு ஏப்ரல் 9 காலை முதல் முன்பதிவு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
புதுச்சேரி நடுங்க வைக்கும் திருட்டு: கோயில் திருவிழா சாக்கில் மாபெரும் கொள்ளை - 45 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் அவுட்!
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
2-ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - ஆங்கில ஆசிரியர் கைது
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
சதுரகிரியில் மீண்டும் காட்டுத்தீ: பக்தர்களுக்கு அனுமதி ரத்து - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget