Today Headlines:கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது; 28ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும்- தலைப்புச் செய்திகள்!
Todays Headlines: இன்றைய தலைப்புச் செய்திகளைப் பார்க்கலாம்.
Lok Sabha Election 2024: வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏன்..? தலைமை தேர்தல் அதிகாரி சாகு விளக்கம்..!
“ Voter Turnout’ செயலியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாக்குப்பதிவு சதவீதம் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் சில குளறுபடிகள் நடைபெற்றது. செயலியில் ஒரு சில வாக்குச்சாவடி அலுவலர்களும் மட்டுமே அப்டேட் செய்தார்கள், இதன் காரணமாகவே வாக்குப்பதிவு சதவீத குளறுபடி ஏற்பட்டது என்று சத்ய பிரதா சாஹூ விளக்கம் அளித்தார். மேலும் படிக்க
Doordarshan Logo : "காவி தியாகத்தின் வண்ணம்.. தூர்தர்ஷன் லோகோவை மாற்றுவது தவறில்லையே" - தமிழிசை சௌந்தராஜன்..
மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி, அதன் முதன்மையான செய்தி சேனலான டி.டியின் புதிய லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு மாற்றி வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன் காவி என்பது தியாகத்தின் வண்ணம் என முதலமைச்சருக்கு பதில அளிக்கும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
Special Classes: கோடை விடுமுறை சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை பாயும் - பள்ளிக்கல்வித்துறை
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறை மற்றும் அரசு பொது விடுமுறை காலங்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வகுப்புகளுக்கு வர சொல்லி மாணவர்களுக்கு அழுத்தம் தர கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும் படிக்க
தேனி, கம்பம் : புதுப்பட்டி சுற்றுலா வாகனம் கவிழ்ந்து நடந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயம்
திருப்பூரில் கம்பெனி ஒன்றில் பணியாற்றக்கூடிய நபர்கள் சிலர் தேனி மாவட்டம் இடுக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது சாலையை கடக்க முயன்ற பெண்ணின் மீது மோதாமல் இருப்பதற்காக வாகன ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மேலும் படிக்க
TN Weather Update: 28-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே இருக்கக்கூடும்.. 13 மாவட்டங்களில் சதமடித்த வெயில்..
இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க