மேலும் அறிய

3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த சூப்பர் அறிவிப்பு வந்தாச்சு..

School holidays: தொடர் விடுமுறை நாட்களான வார இறுதி நாட்கள் மற்றும் குடியரசுதினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்குவரத்து துறை

3 நாள் தொடர் விடுமுறை

விடுமுறை என்றால் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அதிலும் தொடர் விடுமுறை கிடைத்தால் சுற்றுலாவிற்கும் உறவினர்கள் வீட்டிற்கும் பறந்து விடுவார்கள். அந்த வகையில் இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு விடுமுறை தான் சற்று ஓய்வை கொடுக்கும். கடந்த வாரம் தான் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இதனையடுத்து கடந்த திங்கட் கிழமை தான் மீண்டும் பள்ளிகளுக்கு மாணவர்கள் திரும்பினார்கள். இந்த நிலையில் மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதனால் மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகிறார்கள்.

குடியரசு தின கொண்டாட்டம்

நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார இறுதி நாள் விடுமுறையாகும், வருகிற திங்கட்கிழமை குடியரசு தினத்தையொட்டி விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால் வெளியூர்களுக்கு செல்ல பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். எனவே வெளியூர் செல்லும் பயணிகளுக்கு உதவிடும் வகையில் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து தறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 23/01/2026 (வெள்ளிக்கிழமை) 24/01/2026 (சனிக்கிழமை) 25/01/2026 (ஞாயிறு) வார விடுமுறை மற்றும் 26/01/2026 குடியரசுதினம் ஆகிய நாட்களில் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

இதனையடுத்து பயணிகள் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (23/01/2026 வெள்ளிக் கிழமை) 100 பேருந்துகளும் நாளை (24/01/2026 சனிக்கிழமை) 90 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம். மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (23/01/2026 வெள்ளிக்கிழமை) அன்று 550 பேருந்துகளும், நாளை 24/01/2026 (சனிக்கிழமை) 405 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்தும் இன்றும் நாளையும் 24 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து பயணம் செய்யுங்க

இதேபோல பெங்களூர் திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்தாக விடுமுறை முடிந்து சென்னை மற்றும் வெளியூர் திரும்புவதற்கு வசதியாக வருகிற (26/01/2026) திங்கள் அன்று சென்னைக்கு 800 சிறப்பு பேருந்துகள் பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு இடங்களிலிருந்து திருப்பூர், பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடக்ளுக்கு 250 சிறப்பு பேருந்துகள் 26/01/2026 அன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள்து. எனவே வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்ய அறிவுறுத்தப்படுவதாக போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
திடீரென உயர்த்தப்பட்ட கட்டணம்! ஏர்டெல் யூசர்களுக்கு பேரதிர்ச்சி! உடனே இதைச் செக் பண்ணுங்க!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது!
வீடு வாங்கப் போறீங்களா? தமிழக அரசு வெளியிட்ட செம ஹேப்பி நியூஸ்! விலை உயர்வே கிடையாது! 
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget