மேலும் அறிய

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஆணையின் விவரம்

தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு.

கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்திய முக்கிய கோரிக்கையான ஊதிய உயர்வுக்கு, ஒருவழியாக இப்போது வழி கிடைக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காலத்தில் உயிரிழப்பு ஆபத்துச் சவாலையும் எதிர்கொண்டு பணியாற்றிவரும் மருத்துவர்களுக்கு தங்களின் கோரிக்கை நிறைவேறினால் ஆறுதலாக இருக்கும் என பரவலாக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வும் கூடுதல் அலவன்சும் வழங்குவதற்கான ஆணையை சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி, அனைத்து சிறப்பு மருத்துவப் பிரிவுகளிலும் முதுநிலை பட்டயப் படிப்பு முடித்தவர்களுக்கு ஒரு சிறப்பு ஊதிய உயர்வும், எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலைப் பட்டம் முடித்தவர்களுக்கு இரு சிறப்பு ஊதிய உயர்வும் வழங்கப்படும். டி.எம்., எம்.சிஎச். போன்ற சிறப்பு மருத்துவப் படிப்பு முடித்தவர்களுக்கு கூடுதலாக இரண்டு சிறப்பு ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஆணையின் விவரம்

இதைத் தவிர, அனைத்து சிறப்புவகை மருத்துவர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம்தோறும் 14ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறைவான அளவில் இருப்பவர்களைக் கொண்ட மயக்கவியல் முதலிய 11 துறைகளில் உள்ள முதுநிலை பட்டதாரி மருத்துவர்களுக்கு 9ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக அளிக்கப்படும் என்றும் இதுவே மற்ற மருத்துவர் தட்டுப்பாடு இல்லாத துறைகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டதாரி மருத்துவர்களுக்கு 5,500 ரூபாய் மாத ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல, தட்டுப்பாடு உள்ள 11 துறைகளில் பணியாற்றும் முதுநிலைப் பட்டயதாரி மருத்துவர்களுக்கு மாதம் 5ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தட்டுப்பாடு இல்லாத துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு அலவன்ஸ் - சுகாதாரத் துறைச் செயலாளர் ஆணையின் விவரம்

இவர்களைத் தவிர, தொலைவில் இருக்கும் பகுதிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளில் போகவர சிரமமாக இருக்கும் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனைகளிலும் பணியாற்றும் மருத்துவ அலுவலர்களுக்கு, அவர்கள் சிறப்பு மருத்துவம் படித்திருந்தாலும் அதிசிறப்பு மருத்துவம் படித்திருந்தாலும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேகதாது அணை விவகாரம் : தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மேலும், அவசர சிகிச்சை, விபத்து சிகிச்சை, ஒருங்கிணைந்த குழந்தைப்பேறு அவசரச் சிகிச்சை, பிறக்கும்போதே குறைபாடு, சிக்கலுடன் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை, பச்சிளம் குழந்தைகளை ஆரோக்கியத்துக்குக் கொண்டுவரும் சிகிச்சை ஆகிய கடினமான பணிகளில் ஈடுபடும் மருத்துவ அலுவலர்களுக்கு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும். கடினமான பகுதிகள், கடினமான பணிகளில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான படிகளுடன் இது கூடுதலாக வழங்கப்படும் என்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ள ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் சர்ச்சை!
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் சர்ச்சை!
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்
Breaking Tamil LIVE: தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் சர்ச்சை!
பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய யூடியூபர்.. பாஜகவில் இணைந்ததால் சர்ச்சை!
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நடத்துனர்; திருச்சியில் அதிர்ச்சி
Election Commission: வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
வெறுப்பை பரப்பும் வகையில் பேச்சு.. மோடி, ராகுல் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
Breaking Tamil LIVE: தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்
Breaking Tamil LIVE: தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
Amaran: மேஜர் முகுந்த் வரதராஜனின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்: சிவகார்த்திகேயனின் அமரன் பட இயக்குநர் அஞ்சலி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
Embed widget