SP Velumani case :எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தடை நீட்டிப்பு
எஸ்.பி.வேலுமணி மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய தடை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், இறுதி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் டெணடர் அறிவிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோரின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.
வழக்கு:
இதையடுத்து, இவ்வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க கூடாது எனவும் வழக்கை விசாரிக்க வேண்டும் எனவும் வேலுமணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இவ்வழக்கானது, உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதால், உயர்நீதிமன்றத்தில் விசாரிப்பது முறையாகாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.





















