ராமஜெயம் கொலை வழக்கு: “குற்றவாளிகளை நெருங்கல; பிடிப்போம் என்றுதான் கூறினோம்” - எஸ்.பி ஜெயக்குமார்
ராமஜெயம் கொலை வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
ராமஜெயம் கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்றுதான் நீதிமன்றத்தில் கூறினோம், குற்றவாளிகளை நெருங்குகிறோம் என்று கூறவில்லை என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
திருச்சி அமைச்சர் கே.என் நேருவின் தம்பியும் தொழிலதிபருமான ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரனை சூசுபிடித்துள்ள நிலையில் குற்றவாளிகள் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்க உள்ளாதாக நேற்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்த நிலையில் எஸ்.பி ஜெயக்குமார் அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ராமஜெயம் கொலை வழக்கை தற்போது காவல்துறை கண்காணிப்பாளா் ஜெயகுமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. அதில் கடந்த மாதம் விசாரணையை துவங்கிய தனிப்படை பல்வேறு தகவல்களை சேகரித்துள்ளனா். இந்நிலையில், ராமஜெயம் கொலை வழக்கானது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது சிறப்பு புலனாய்வு குழு தங்கள் தரப்பில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
#BREAKING | 50 லட்சம் வெகுமதி
— ABP Nadu (@abpnadu) April 23, 2022
ராமஜெயம் கொலை வழக்கு குறித்து தகவல் தருபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பண வெகுமதி வழங்கப்படும்..!
சிறப்பு புலனாய்வு குழு எஸ்.பி. ஜெயக்குமார் அறிவிப்பு
துப்பு தருபவர்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்படும் எனவும் உறுதி#RamajeyamMurderCase pic.twitter.com/9iejVWhBlf
அவா்களின் அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வருகிற ஜூன் 10-ம் தேதி அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.
இந்நிலையில் இன்று இது குறித்து தகவல் தெரிவித்த எஸ்.பி ஜெயக்குமார், ராமஜெயம் கொலை வழக்கில் ஏற்கனவே விசாரணை மேற்கொண்ட 6 அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமஜெயம் மனைவி, உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் விசாரனை மேற்க்கொள்ளபட்டது. ராமஜெயம் சகோதரர் அமைச்சர் நேருவிடம் இரண்டு முறை விசாரனை மேற்க்கொள்ளபட்டது என தெரிவித்திருக்கிறார்.
மேலும், விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்று தான் நீதிமன்றத்தில் கூறினோம். குற்றவாளிகளை நெருங்குகிறோம் என்று கூறவில்லை. ஆனால் பல்வேறு கோணங்களில் விசாரணை முழுமையாக நடத்தி வருகிறோம் என எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்