Southern Railway: தென் மாவட்ட மக்களே உஷார்! பராமரிப்பு பணிகள்.. முக்கிய ரயில்கள் சேவையில் மாற்றம்
திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது

தெற்கு ரயில்வேயில் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் மற்றும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் மற்றும் பகுதியளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பராமரிப்பு பணிகள்:
திருவனந்தபுரம் கோட்டத்தில் பொறியியல் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
- சென்னை எழும்பூரில் இருந்து வரும் 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), சாலக்குடி-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சாலக்குடியில் நிறுத்தப்படும்.
- மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து வரும் ஜூன் 9-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12665), வள்ளியூர்-கன்னியாகுமரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் நிறுத்தப்படும்.
- தாம்பரத்தில் இருந்து வரும் ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20691), நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.
- மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் (20692), நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும்.
Change in the pattern of Train Services
— DRM Thiruvananthapuram (@TVC138) May 20, 2025
Fixed Time Corridor Block has been approved for facilitating engineering works over various sections in #Thiruvananthapuram Division consequently the following are the changes in the pattern of train pic.twitter.com/L0KcBHC6WG
- திருச்சியில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 7.20 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22627), நெல்லை-திருவனந்தபுரம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும்.
- திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து ஜூன் 11-ந்தேதி காலை 11.35 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (22628), திருவனந்தபுரம்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும்.
- நாகர்கோவிலில் இருந்து வரும் ஜூன் 11-ந்தேதி காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16321), நாகர்கோவில்-வள்ளியூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, வள்ளியூரில் இருந்து காலை 8.26 மணிக்கு புறப்பட்டு கோவை செல்லும்..
மேலும் இந்த ரயில்களில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்






















