South West Monsoon: தொடங்கியது தென்மேற்கு பருவமழை.. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழை கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் தென்மேற்கு பருவமழை கேரளாவை ஓட்டியுள்ள தமிழக எல்லைகளில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 31, 2022
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) May 31, 2022
10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தர்மபுரி, சேலம், நாமக்கல்கரூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே போல நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொருத்தவரை இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ்வரை வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே போல மன்னர் வளைகுடா மாலத்தீவு பகுதிகளில் பலத்த வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்