மேலும் அறிய

மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?

இன்றைய போதை மறுவாழ்வு மையங்கள் எழுப்பும் வாதங்கள், திராவிட அடையாளம், தமிழர் அடையாளம், தேசிய அடையாளம் போன்றவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாக உள்ளன. 

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அரசு மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியது. தமிழ்நாடு அரசின் இந்த முடிவு, தமிழ்நாட்டில் மீண்டும் மதுவிலக்கு தொடர்பான வாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

மது கலாச்சாரம், மதுப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப வன்முறைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்பான பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் பொதுவெளியில் உள்ளன. இருப்பினும், மது கலாச்சாரத்தை எதிர்த்து போராடுவதற்கான அரசியல் இங்கு உள்ளதா? என்ற மேலோட்டமான கேள்விக்கான பதிலை இக்கட்டுரையில் காண்போம்.   

இந்தியாவின் மொத்த மதுபான விற்பனையில் 45% சதவிதம் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய ஐந்து தென்மாநிலங்களில் நடைபெறுவதாக Crisil ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. மேலும், இந்த மாநிலங்களின் சொந்த வரி வருவாயில் 10% விழுக்காடு, மதுவிற்பனை மூலம் கிடைக்கப்பெறுகிறது. பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் மகாராஷ்டிரா ஆகிய வட மாநிலங்களில் இந்த விழுக்காடு 5 முதல் 10% க்கும் குறைவாக உள்ளன. 


மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?

ருப்பினும், சிறந்த நிர்வாகம், கல்வியறிவு விகிதம், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம், தேசிய சராசரி வளர்ச்சி விகிதத்தை விட அதிகப்படியான வளர்ச்சி விகிதம், சிறந்த தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு, வறுமை ஒழிப்பு போன்ற பல்வேறு குறியீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் மேம்பட்டு நிற்கின்றன.

எனவே, விளிம்பு நிலை சமூகம் சார்ந்த அரசியலை தென்மாநிலங்கள் முன்னெடுத்திருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால்,சமூக அளவில் ஆழமாக  ஊடுருவியிருக்கும் மது கலாச்சாரம் அதன் அடிப்படை அரசியலை கேள்வி கேட்கும் விதமாக அமைகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் மதுப்பழக்கம் உண்மையான சமூக பிரச்சனையாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.       

விவாதம் தேவைப்படுகிறது? 

மது கலாச்சாரத்தை ஒழிப்பது சாத்தியமா? அப்படியென்றால் அதை எங்கிருந்து தொடங்குவது? மதுவிலக்கு சரியான தீர்வா? தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்தில் அரசின் அதிகபட்ச வரையறை என்ன?   சுற்றுலா,பசுமை எரிசக்தி மூலம் மாற்று வருவாயை அதிகரிக்க முடியுமா?  போன்ற பெருவாரியான கேள்விகளுக்கு அரசிடம் இருந்து பதிலை எதிர்ப்பார்ப்பது மிகவும் அபத்தமான ஒன்று. பழக்கப்படுத்தப்பட்ட நூற்றாண்டு அரசியலை மறுஆய்வுக்கு உட்படுத்த தேவையான ஆற்றலும், சொல்லாடலும் கற்பனையும் தேவைப்படுகிறது. 

சமூக அளவில் மது கலாச்சாராதத்துக்கு எதிரான வலுவான போராட்டம் இல்லை. மேலும், தீவிரவாதம், இந்தியா- அமெரிக்கா வெளியுறவு கொள்கை போன்ற தலைப்புகளில் கடுமையாக விவாதிக்கும் ஊடகங்கள், மதுப்பழக்கத்தை வெறும் நகைச்சுவையாகவே கடந்து செல்கின்றன. "மதுப்பழக்கத்தால் வெட்டிக் கொலை"என்பதுதான் அதிகபட்ச செய்தியாகவும் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் தற்போதைய அரசியல் என்பது  காலனியாதிக்க அரசியல் (Colonial Politics), பின்காலனித்துவ அரசியலுக்கும் (Post-Colonial Politics) ஒரு தொடர்ச்சியாக இருப்பதும், அன்றாட மனிதனைப் பற்றிய அரசியல் இல்லாமல் போனதும் இதற்கு முக்கிய காரணமாகும்.   

சுதந்திரதுக்கு முந்தைய இந்தியாவில், ஆங்கிலேய இந்தியாவின் அங்கமாக இருந்த சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நிலப்பரப்புகள் சமூக அளவில் மறைமுகமாக ஆளப்பட்டன. பிரித்தானிய முடியாட்சி அரசு தனது காலனி நாடுகளில் தனிமனித உரிமைக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை. மாறாக, சமூக பிரதிநிதித்துவ அரசியலை மேற்கொண்டது. இந்திய நிலப்பரப்புகளில் முதன்முறையாக இந்து, இஸ்லாம்,பட்டியல் சாதியினர், பிறபடுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியின மக்கள் போன்ற சமூக குழுக்கள் உருவாக்கப்பட்டு, அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. நிலவுடமை சமூகத்தினர், ஆட்சியாளர்கள், படித்த மேல்தட்தட்டினர் அதிகாரத்துவ ரீதியான நிலைகளை கொண்டிருந்த சென்னை மாகாணத்தில், முதன் முறையாக, விளிம்புநிலை (Sub-altern) மக்கள் அதிகாரத்தை நோக்கி நகர ஆரம்பித்தனர். சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில், தென்னிந்தியாவில் தான் மொழிவழியான அடையாளங்கள்  முன்னெடுக்கப்பட்டன. சென்னை மாகாணத்தில் இருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 


மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?

இதன்காரணமாக, மொழிவழி மாநிலங்களிலும் சமூகளவிலான பிரதிநிதித்துவ மறைமுக அரசியலே முதன்மைப்படுத்தப்பட்டது. உதாரணமாக, தமிழ்நாட்டில் 1950- 70 காலகட்டங்களில் தமிழர் நிலப்பரப்பு, தமிழர் அடையாளம், ஆரியம் - திராவிடம் என்ற சமூக அளவிலான அரசியல் மேலோங்கி இருந்தது. பிராமணரல்லாதோர் அனைவரும் ஒற்றை அடையாளத்துடன் பொருந்திய தமிழர் என்ற  கட்டமைப்பை திராவிட இயக்கம் உருவகப்படுத்தியது. இந்த அரசியல், பெண்களுக்கு சொத்துரிமை, பெண்களும்  அர்ச்சகராகலாம்  போன்ற அதிகாரித்துவ நிலைப்பாடை முன்னெடுத்தது.         

எம்.ஜி.ஆர்-ஆல் 1972ல் தொடங்கப்பட்ட அ.தி.மு.க, திராவிட அரசியலுக்குள், தனது அரசியல் பாதையை வேறுபடுத்தத் தொடங்கியது. 1970-90 வரையில் பெண்கள், குழந்தைகள், மீனவர்கள் போன்ற விளிம்புநிலை சமூகங்களை அதிமுக அரசியலுக்குள் கொண்டு வந்தது.

1990-களில் சமூக பிரதிநிதித்துவத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக திருமாவளவன், ராமதாஸ் வருகை அமைந்தது. திராவிடம், ஒபிசி வகுப்பினர் என்ற பெரிய சமூக கட்டமைப்பை கேள்வி கேட்கத் தொடங்கினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர், தலித் அரசியல் தொடங்கியது. அதன்பிறகு,வந்த நாம் தமிழர் கட்சியோ- யார் தமிழர்? எது திராவிடம் என்ற சொல்லாடல்களுக்குள் சுற்றி வருகிறது.

மதுப்பழக்கத்தால் உடல்நலக் கேடு என்பதை வலியுறுத்துவதை விட, திராவிடன் குடிக்கமாட்டான், தமிழன் குடிக்கமாட்டான், குடிப்பதினால் தமிழன் மானத்தை இழந்தான், என்பது தான் இன்றைய அரசியல் சொல்லாடல்களாக உள்ளன. மணப்பெண்ணின் திருமணத்துக்கு திருமாங்கல்யம், சத்துணவுத் திட்டம், குடும்பத் தலைவியருக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை போன்றத் திட்டங்களை அறிவிக்கும் நமது அரசு.... ஏன் தனது கொள்கைகளில் மதுவிற்பனை மூலம் கிட்டும் வருவாய் இன்றையமையாதது என கூறுகிறது.

மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?

 

'மாநில அரசு' பற்றிய கற்பனை:  மக்கள் புதிதாக உருவாக்கப்பட தங்கள் மாநில அடையாளங்களை பேணிக் காக்க விரும்பிகின்றனர். தென்னிந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு, உச்சபட்ச கதாநாயகன் பிறக்கிறார் என்று பேராசிரியர் மாதவ் பிரசாத் "cine- Politics" என்ற தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார். திராவிட நாடு, தமிழ்நாடு, கன்னட தேசியம், தெலுங்கு தேசியம் போன்ற வாதங்களை முன்வைத்த அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி ராமாராவ், ராஜ்குமார், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் மாநில நிலப்பரப்பின் இறையாண்மையைக் கட்டிக்காக்கும் கடவுள்களாக மதிக்கப்பட்டனர். அறிஞர் அண்ணா, கருணாநிதி,  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி ராமாராவ் போன்றோர் மாநில முதல்வர்களாக முன்னேறினர். சிவாஜி, கமல், ரஜினி, ராஜ்குமார் போன்றோர் அன்றைய அரசியல் சூழலை மாற்றும்  சக்தியாக உருவெடுத்தனர்.

இதன் காரணமாக,தென்னிந்திய மாநிலங்களில் "மாநில அரசு" என்பது ஒருவகையாக கதாநாயகன் வேடம் ஏற்று செயல்படுகிறது. அன்றாட மனிதனின் அரசியல் உருவாக்கப்படாத வரை, தென்னிந்திய மாநிலங்களில் 'அரசு' ஒரு பாதுகாவலாராகவே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. கதாநாயகன் போல், குடிக்கும் ஆண்களிடம் இருந்து பெண்களை காப்பாற்ற வேண்டும், தவறு செய்யம் குடிகாரர்களைத் தண்டிக்க வேண்டும்.

மதுபழக்கம் தொடர்பான வன்முறைகளால் உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மது கலாச்சாரத்திற்கு எதிரான ஒரு  வலுவான போராட்டத்தை ஏன் பெண்களால் முன்னெடுக்கவில்லை. மதுகலாச்சரத்தை ஒழிக்க போகிகிறோம் என்பதை முதன்மைபடுத்தி ஒரு கட்சி தமிழ்நாட்டில் உருவாக முடியுமா... என்பது கூட  சந்தேமாக உள்ளது. 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் 5.69 லட்சம் பேர் கூடுதலாக வாக்களித்துள்ளனர். அனைத்துக் கட்சிகளும் தங்கள் நலத்திட்டங்களை பெண்களை மையமாமாக வைத்து தான் தேர்தல் பரப்புரையை மேற்கொள்கின்றனர் என்பதையும் இங்கு நினைவு கூற வேண்டும்.     

அன்றாட மனிதனை பற்றிய பார்வைகள் : 19-ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் முடியாட்சி, மதச்சார்பின்மையுடன் கூடிய ஜனநாயகம், இறையாட்சி போன்ற பல்வேறு கோட்பாடுகள் ஒன்றுக்கு எதிராக சண்டைப் போட்டுக் கொண்டன. இன்று வரையில், இதுதான் ஒற்றைக் கோட்பாடு, ஒற்றை வாழ்க்கைமுறை என்ற நிலைப்பாட்டை ஐரோப்பியா எடுக்கவில்லை. இதன் காரணமாக, அங்கு 'அரசு' என்பது பல்வேறு கோட்பாடுகளை சமன் செய்து சீர்தூக்கும் ஒரு கருவியாக மட்டுமே செயல்படுகிறது. அது, தன்னிச்சையாக இயங்குவதில்லை.  

நமது அரசியலில், அன்றாட மனித வாழ்வியல்கள் பற்றிய சொல்லாடல்கள் உருவாக்கப்படவே இல்லை. மாநிலத்தின்  இறையாண்மை பற்றிய சொல்லாடல்கள், சமூக பிரதிநிதித்துவ (Social Representation) அரசியல் தனிமனிதன் வாழும் சமூக கட்டமைப்புகளை உறுதிப்படுத்தி வருகிறது.   

மது கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான அரசியல் நம்மிடம் உள்ளதா?

மது பழக்கத்தை விட முடியாமல் முடங்கிவிடும் மனிதர்களும், அதனால், ஏற்படும் பரிதாப சாவுகளும், பெண்கள் மீதான குடும்ப வன்முறைகளும், பாலியல் குற்றங்களும், குடும்ப வறுமைகளும், சாலை விபத்துக்களும், மறுவாழ்வு மையங்களில் காணப்படும் மெளனமும்  இன்றளவும் மொழிபெயர்க்கப்படாமலே உள்ளன. இன்றைய போதை மறுவாழ்வு மையங்கள் எழுப்பும் வாதங்கள் திராவிட அடையாளம், தமிழர் அடையாளம், தேசிய அடையாளம் போன்றவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவையாக உள்ளன. அடையாளமற்ற தனிமனித அரசியல் வேண்டும் என்பதல்ல, நாம் முன்னேடுத்த/முன்னெடுக்கும்/முன்னெடுக்கப் போகிற அரசியலில் எளிமையான/இயல்பான/தவறுசெய்யக்கூடிய மனிதர்களைப் பற்றியதாய் இருக்க வேண்டும்.          

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget